Connect with us

அரசியல்

மதம் மாறும் அறிவிப்பை வெளியிட்டார் மாயாவதி எந்த மதத்திற்கு மாறுகிறார் தெரியுமா?

Published

on

மதம் மாறும் அறிவிப்பை வெளியிட்டார் மாயாவதி எந்த மதத்திற்கு மாறுகிறார் தெரியுமா?

உத்திரபிரதேசம்.,

உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மாயாவதி தான் மதம் மாற இருப்பதாகவும், தான் மட்டும் மதம் மாறாமல் அம்பேத்கர் போல் பலரையும் அழைத்து செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகிற 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மாயாவதி அம்பேத்கர் மரணிப்பதற்கு முன்பு புத்த மதத்தை தழுவி தீட்சை பெற்றார், நானும் அதுபோல் அம்பேத்கரை பின்பற்றி புத்த மதத்திற்கு மாற இருக்குறேன், நான் மட்டும் மதம் மாறுவது மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மதம் மாற இருப்பதாக மாயாவதி பொது கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

முஸ்லீம் மக்களை மேடையில் வைத்துக்கொண்டு அவர்கள் வாக்குகளை பெற மாயாவதி இதுபோல் பேசியிருப்பதாகவும், முஸ்லீம் மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக மாயாவதி ஏன் மதம் மாற வேண்டும் என்ற கேள்வியை பாஜக எழுப்பியுள்ளது.

தற்போது மாயாவதியின் அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share