மே 3 பிறகு வித்தியாசமான முறையில் ஊரடங்கு முதல்வர்களிடம் மோடி கொடுத்த விளக்கம் என்ன?

மே 3 பிறகு வித்தியாசமான முறையில் ஊரடங்கு முதல்வர்களிடம் மோடி கொடுத்த விளக்கம் என்ன?

Loading...

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார், இதில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதல்வர்கள் உடனான கலந்துரையாடலில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய கலந்துரையாடலில் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநில முதல்வர்கள் மட்டுமே இன்று பேசுவதற்கு இதில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

Loading...

மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது முழுமையாக சமூக பரவல் என்ற நிலைக்கு மாறவில்லை என்பதை அனைத்து மாநில முதல்வர்களும் ஏற்றுக்கொண்டனர். இவை அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார் பிரதமர் அப்போது முதல்வர்களிடம், பிரதமர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதுபற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை முழுமையாக சீல் செய்யவும் அங்கு எந்த போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது எனவும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பிரதமர் கருத்து தெரிவித்தார். மேலும் அனைத்து மாநிலங்களின் தொழில் வருவாய் குறித்தும் மக்களின் மனநிலை குறித்தும் முதல்வர்களிடம் கேட்டறிந்தார்.

பிரதமரின் உத்தரவின் மூலமாக பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலை ஏற்படும். அதே நேரம், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரும்பாலான நகர்ப்புற பகுதிகள், சிவப்பு மண்டலத்தில் வருவதால் அவற்றில் ஊரடங்கு உத்தரவு தொடரக்கூடும் அங்கும்கூட, வட்டார வாரியாக ஓரளவுக்கு தளர்வு இருக்கக் கூடும் என்று தெரிகிறது. மே 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்பா, பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*