Connect with us

முகப்பு

இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர் !

இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர் !

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான க்ளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் சர்ச்சைகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பேர்போனவர். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஹீரோவாக வலம் வந்தவர், அதன் பின் மோசமான ஆட்டத்தால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதே போல ஐபிஎல் தொடரிலும் சொதப்ப ஆரம்பித்தார்.

Loading...

இந்நிலையில் அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து சர்ச்சையானக் கருத்துகளை தெரிவித்து அணி நிர்வாகத்தினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாமா என்று கூட யோசித்தார். இந்நிலையில் அவரை அந்த கஷ்ட காலங்களில் கூட இருந்து தேற்றியது அவரது காதலியான வினி ராமன் தான்.

Loading...

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வினி ராமன் ஒரு இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Trending