Connect with us

#24 Exclusive

கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய சுழலில் மாஸ்டர் !அதே நாளில் வெளியாகும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் !

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தை கைதி என்ற வெற்றிப்படத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் . இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார் . மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் . படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மாஸ்டர் திரைப்படம் கோடை விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டை கணக்கில் கொண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே சமையத்தில் வேறு இரண்டு பெரிய படங்களும் வெளியாகவுள்ளது .

முதலாவது படம் சூரரை போற்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் சூரரை போற்று இந்த திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இந்த படத்தை முன்பே வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் கிராபிக்ஸ் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது அதனால் இந்த படத்தையும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை கணக்கில் வைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் .

Loading...

அதேபோல விஷால் நடிப்பில் உருவாகிவரும் இரும்பு திரை படத்தின் இரண்டாவது பாகமான சக்ரா என்ற படமும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது ஏற்கனவே வெளியான இரும்புத்திரை படம் வெற்றிப்படமாக மாறியதால் சக்ரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது

Loading...

மாஸ்டர் படம் வெளியாகும் அதே சமையத்தில் சூர்யாவின் சூரரை போற்று மற்றும் விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை .

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending