Connect with us

#24 Exclusive

மெரினாவில் இனி காதல் ஜோடிகள் சுற்ற முடியாது ! அதிரடி உத்தரவு எதிரொலி !!

Published

on

சென்னை :- சென்னை என்றால் பலருக்கும் சட்டென நினைவிற்கு வரக்கூடியது மெரினா கடற்கரைதான் வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பலரும் மெரினா கடற்கரைக்கு ஒரு முறையேனும் சென்று பார்வையிடாமல் இருக்க மறப்பதில்லை.

அந்த அளவு மெரினா சென்னையின் அடையாளமாக மாறி இருக்கிறது, இந்நிலையில் உலகின் மிகவும் நீளமான கடற்கரையில் ஒன்றான மெரினா கடற்கரையை மாநகராட்சி நிர்வாகம் தூய்மையாக பராமரிப்பதில்லை எனவும், இதுகுறித்து பல முறை அறிவுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு அனைத்து தரப்பு மக்களாலும் வைக்கப்பட்டது.

Loading...

இந்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை இன்று வெளியிட்டுள்ளது அதன்படி

Loading...

“6 மாதங்களில் மெரினா
கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த
கடற்கரையாக மாற்ற வேண்டும்” என்று
சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் , கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளைபின்பற்றாத கடைகளை அகற்றவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாத தொடக்கம் முதல் மெரினா கடற்கரையை சுற்றி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும், கடைகள் சில அகற்றப்பட இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது, இதனால் கடைகள் அகற்றப்பட்டு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டிற்குள் தெரியாமல், கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு மெரினா கடற்கரையில் சுத்தும் இளம் ஜோடிகள் கவலை அடைந்துள்ளனர்.

உலக தரமாக கடற்கரையை மாற்றுவது இப்போ ரொம்ப முக்கியமா என யூடுப் சேனல் ஒன்றில் இரு காதல் ஜோடிகள் பேசுவது வேறு வைரலாகி வருகிறது.

©TNNEWS24

Loading...

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552