Connect with us

#24 Exclusive

சற்றுமுன் திருமுருகன் காந்தியை தொடர்ந்து உதயநிதிக்கு ஆப்புவைத்த மாரிதாஸ் ! தொடர்புடைய முக்கிய ஆதரங்களை வெளியிட்டார் !

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தள பிரபலம் மாரித்தாஸ் நேற்று தனது யூடுப் சேனலில் வீடியோ ஒற்றை வெளியிட்டு உதயநிதிக்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது திமுகவின் முக்கியநபர்கள் வியாபாரங்கள் மற்றும் நகர்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு திமுகதான் உண்மையான திருடர்கள் என்றும் உதயநிதியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார், இதுகுறித்து அவர் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு :-

திமுக ஒரு கட்சி அல்ல அது மக்களை கொள்ளை அடித்து , அடித்த கொள்ளையை பங்கு பிரித்து கொள்ளும் கூடாரம் அவ்வளவு தான் எனக்கு தெரிந்து. இல்லை என்றால்

Loading...

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பட்டத்து இளவரசர் உதயநிதி அவர்கள் கீழ் காணும் ஆதார கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்? சும்மா தமிழ் தமிழ் என்று ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.

Loading...

திமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு முதலீடு செய்யத் துடிக்கிறார்?

₹26,000 கோடி முதலீட்டைத் தமிழகத்தில் இளைஞர்களுக்காக இங்கே சிறு குறு தொழில்களில் முதலீடு செய்தால் இங்கே வேலைவாய்ப்பு உருவாக்கலாமே! அதையும் மீறி இலங்கையில் Hambantota Refinery-ல் ₹26,000 கோடி முதலீட்டைக் கொண்டு செல்வது பச்சை துரோகம் இல்லையா?

இங்கே முதலீட்டைக் கொண்டு வருவதற்குப் பிரதமர், முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது கேலி கிண்டல் செய்த திமுக ஸ்டாலின் அந்த கட்சி நிர்வாகிகள் இந்த தமிழ் மக்களிடம் சம்பாதித்த, அடித்த கொள்ளை பணத்தைக் கொண்டு வெளிநாடுகளில் முதலீடு செய்கின்ற நிலையில், என்ன தகுதி இருக்கிறது இங்கே தமிழக இளைஞர்கள் பற்றிப் பேச?

இந்த விதம் ₹26,000 கோடி முதலீடோ இல்லை சன் டீவி ஆரம்பித்து உதயநிதி வைத்திருக்கும் படம் தயாரிக்கும் நிறுவனம் தொட்டு கனிமொழி தாயார் நடத்தும் கப்பல் நிறுவனம் வரை எதுவும் கார்ப்பரேட் இல்லையா? ஆனால் எப்படி வெக்கமே இல்லாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று போராட்டம் தூண்டிவிட முடிகிறது ஸ்டாலின் மற்றும் அவர் அடிமைகளால்?

சரி இந்தியாவில் உள்ள தமிழர்களுக்குத் தான் ₹26,000 கோடி முதலீடு கிடையாது என்றால், இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதியில் அந்த முதலீட்டைச் செய்திருக்கலாமே? அட அந்த தமிழர்களுக்காவது ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த வகையிலாவது சரி என்று ஏற்கலாம் ஆனால் அதுவும் கிடையாது. திமுக முதலீடு செய்யவிருக்கும் பகுதி Hambantota. இது பச்சை துரோகம் இல்லையா?

தொழில் வளர்ச்சி இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தான் பெரும் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. அந்த விதம் குறைந்தபட்ச நேர்மை இருந்தாலும் கூட அந்த முதலீடு தமிழர்கள் வாழும் பகுதியில் செய்திருக்கலாமே? இதற்குப் பகுத்தறிவு என்ன பதில் சொல்லப் போகிறது.

அடுத்த சில பொருளாதார கேள்விகள்:

₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது? இந்த ₹26,000 கோடி பணத்தை மொரிசியஸ் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் வழியாக இலங்கையில் முதலீடு செய்ய உள்ளார்கள் திமுக தலைமை என்ற செய்தி உண்மையா?

அப்படி என்றால் அந்த மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட KSK Energy Ventures என்ற நிறுவனத்திற்கு மறைமுகமாக லாபம் கிடைக்க 2009-2014 திமுக நிலக்கரி ஒதுக்கீடு JR Power Gen என்ற நிறுவனத்திற்குச் செய்த போது கிடைத்த கருப்புப் பணம் தான் மொரிசியஸ் நாட்டிலிருந்து சிங்கப்பூரில் உள்ள Silver Park International Pte Ltd நிறுவனத்தின் வழியாக முதலீடு செய்யத் துடிக்கிறது திமுக. இல்லை திமுக கட்சித் தலைமை மொரிசியஸ் நாட்டில் பதுக்கிய பணத்தைத் தான் இந்த விதம் முதலீடாக நம் நாட்டிற்குள் கொண்டுவராமலேயே வெளியே இருந்து முதலீட்டு செய்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டுவது சரிதானே?

எப்படி JR Power Gen தொடங்கி அதற்கு முறைகேடாக நிலக்கரி ஒதுக்கப்பட்டு பின் அந்த நிறுவனத்தை KSK Energy Ventures செய்து பல ஆயிரம் கோடிகளை பக்காவாக கொள்ளை அடித்த அதே வழியில் தான் Accord Energy Corporation உருவாக்கியது திமுக ஜெகத் ரஜ்சகன் வழியாக என்ற குற்றச்சாட்டு உண்மை தான் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

ஏன் என்றால், JR Power Gen தொடங்கி அதை எதற்கு விற்பனை செய்யவேண்டும்? பின் எதற்காக அதே போல் ஒரு தெர்மல் பவர் பிளாண்ட் உருவாக்க Accord Energy Corporation நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும்? ஆக இப்படி நிறுவனங்களை உருவாக்கி அதை விற்பனை செய்வது அதைக் கொண்டு கருப்புப் பணத்தை சட்டப்படி பக்கா திட்டத்துடன் உள்ளே கொண்டு வர முயற்சி செய்துள்ளது திமுக என்று குற்றம்சாட்டலாமா?

இறுதியாகக் கேட்க வேண்டிய இரண்டு கேள்வி :

01)ELITE DISTILLERIES என்ற சாராய தொழில் சாலையை வைத்து 2006 – 2011 வரையில் வருடம் வருடம் பல ஆயிரம் கோடிகளை இந்த மக்கள் சாராயத்தைக் குடிக்க வைத்து நாசம் செய்து பல குடும்பங்களைத் தெருவில் நிறுத்திய உங்களுக்கு எங்கள் இறுதி கேள்வி தமிழனுக்குச் சாராயம் – அதைக் கொண்டு சம்பாதித்த கொள்ளை அடித்த பணத்தில் சிங்களவர்களுக்கு ஆயில் சுத்திகரிப்பு ஆலை வேலை வாய்ப்பா???? நீங்கள் தான் இந்த தமிழனை வைத்தும் தமிழை வைத்தும் பிழைப்பு நடத்தும் வெக்கம் கெட்ட கூட்டம். எனவே தமிழின துரோகி திமுக என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

02)Hambantota துறைமுகம் சீனா தனது ராணுவ மற்றும் வர்த்தக கப்பல்கள் வசதிக்காக உருவாக்கிய துறைமுகம் என்ற வகையில் 99% குத்தகை எடுத்து வைத்துள்ள நிலையில் எந்த துறைமுகத்திற்கு வரும் ராணுவ , வர்த்தக கப்பல்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான வேலை செய்வதற்காகத் தான் திமுக அங்கே அந்த துறைமுகம் அருகே தனது MP மூலம் 26,000 கோடி முதலீட்டைக் கொண்டு சென்றுள்ளது. அப்படி என்றால் சீனா மூலம் இந்தியாவிற்கு பெரும் துரோகத்தை திமுக செய்கிறது. காரணம் காசு காசு காசு… என்று சொல்வது சரிதானே?

மனசாட்சியில் 1% நியாயம் என்று ஒன்று இருக்கும் என்றால் இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்யத் துணிந்த திமுக இன்னுமா நம்புகிறார்கள்?????

அதிமுக கொள்ளை அடிக்கவில்லையா என்று கேட்கலாம் இல்லை என்று கூற முடியாது. ஆனால் அவர்களுக்கு மாற்றி திமுக என்று சொல்வது தற்கொலைக்குச் சமமான முடிவு என்பதை மக்கள் இந்த ஒரு விவகாரத்தைப் புரிந்து கொண்டாலே உணர முடியும் அல்லவா???

மக்களுக்குச் சொல்லி விசயத்தைப் புரிய வைக்க வேண்டிய செய்தி ஊடகமும் மீடியாவும் திமுகவிற்கு வேலை செய்யும் அடிமைகளாக ஆகிவிட்ட நிலையில் இது மட்டும் அல்ல அனைத்து திமுகவினர் அயோக்கியத்தனமும் மூடி மறைக்கப்படும். திமுக ஒரு யோக்கியவான் கட்சியாக மீடியாக்களால் காட்டப்படும்.

தமிழ் தமிழ் என்று மக்களைத் திசை திருப்பி விட்டு அவர்கள் பையில் உள்ள பணத்தைத் திருடுவது என்ற புத்திசாலித் தனம் அறிந்த ஒரு கட்சி.. மீண்டும் சொல்வேன் திமுக கூடாரம் என்பது கூட்டம் சேர்ந்து கொள்ளை அடிப்போம் , அடித்த கொள்ளையைப் பங்கு பிரிப்போம் என்று இயங்கும் ஒரு திருட்டு கம்பெனி.

என்னைப் பொறுத்தவரை திமுக ஒரு கேன்சர்.

{இதற்கான முழு ஆதரத்துடன் கூடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம் இங்கேயும் முடிந்த அளவு இத்தோடு கொடுத்துள்ளோம்.}

இங்கே பெரும்பாலான செய்தி ஊடகங்கள் ஊடகங்கள் அல்ல அவை திமுக அடிமை ஊடக கூட்டம் , திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வேலை செய்யும் வெக்கம் கெட்ட கூலி கூட்டம் தவிர வேறு. இது போன்ற விவாதங்கள் நடத்த வாய்ப்பே இல்லை. மக்கள் தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கடுமையான குற்றசாட்டுகளை தரவுகள் மூலம் முன்வைத்துள்ளார், மேற்கொண்ட தரவுகள் மூலம் கார்ப்பரேட் கைக்கூலி என்று பாஜகவை தொடர்ந்து விமர்ச்சித்து வரும் உதயநிதிக்கு ஆப்பு வைத்துள்ளார் மாரிதாஸ் என்று கருத்துக்கள் வலம்வருகின்றன.

Loading...

Trending