மாரிதாஸ் வீட்டிற்க்குள் சென்னை காவல்துறையினர் வெளியானது வீடியோ !!

சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் திக ஆகிய இயக்கங்கள் எவ்வாறு தமிழக மக்களை திசை திருப்பி வருகின்றன என்பது குறித்து பல்வேறு வீடியோகளை வெளியிட்டு தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் மாரிதாஸ், இவர் சமீபத்தில் ஊடகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெளியிட்டார்.

Loading...

அதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள், எடுக்கப்பட்டன, சிலர் வேலையும் இழந்தனர், இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தது, அத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாரிதாஸ் மீது திமுக ஆதரவு மருத்துவர்கள் நல சங்கமும் புகார் மனு அளித்தது அதில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் திடீர் என மாலையில் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சென்னை மாநகர காவல்துறையினர் திடீர் என விசாரணை நடத்தி வருகின்றனர், அவர்கள் மாரிதாஸ் மீது கொடுப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும், அதற்கு மாரிதாஸ் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வீடியோ வெளியிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

Loading...

திடீர் என மாரிதாஸ் வீட்டில் காவல்துறையினர் வருவதை அறிந்த பாஜகவினர் அங்கு சென்று மாரிதாஸிற்கு ஆதரவாக, காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டனர், மேலும் மாரிதாஸ் பாஜகவினரிடம் சாதாரண விசாரணை என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிதாஸ் வீட்டில் தற்போதைய சூழலில் போலீஸ் விசாரணை செய்ய வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுந்துள்ளது.

திமுக ஒப்பந்தம் செய்துள்ள IPAC குறித்து இரண்டு நாட்களில் வீடியோ வெளியிடப்படும் என மாரிதாஸ் தெரிவித்திருந்த சூழலில் இன்று திடீரென காவல்துறையினர் அவரது வீட்டில் சென்று விசாரணை நடத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வீடியோ கீழே :-

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3950 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*