குடியரசு தலைவரை சந்திக்கும் மாரிதாஸ் ! திமுகவின் தோலை உரிக்கப்போவதாக சவால்! எப்படி தெரியுமா ?

அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்த்த கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர் மாரிதாஸ் . இவரை இரண்டரை லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கின்றனர் பேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இவர் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார் .

Loading...

இந்நிலையில் சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது அதில் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டதாக கூறிய திமுக அதை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தது . தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 6 கோடி தான் என்ற நிலையில் திமுக எப்படி 2 கோடி கையெழுத்து பெற்றது என்ற சந்தேகம் எழுந்த நிலையில்

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட மாரிதாஸ் நான் பலரிடம் விசாரித்துவிட்டேன் அவர்கள் கூறுவது எங்களிடமோ எங்கள் அக்கம் பக்கத்திலோ திமுக இதுபோன்ற கையெழுத்து பெற வில்லை என்பதுதான் என்று கூறியிருந்தார் .

Loading...

இந்நிலையில் சற்றுமுன் ஒரு பதிவை வெளியிட்டுள்ள மாரிதாஸ் குடியரசு தலைவரை பார்க்க நேரம் கேட்டுள்ளதாகவும் விரைவில் அவரை சந்தித்து திமுக பெற்ற கையெழுத்துகள் போலி என்று நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளார் . இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர் . மாரிதாஸ் வெளியிட்ட பதிவு

“அனைவருக்கும் வணக்கம்,
மதிப்பிற்குரிய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அவர்களைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
திமுக கொடுத்த 2கோடி கையெழுத்தில் 95%மேல் போலியானவை,அதன் உண்மைத் தன்மை ஆய்வு செய்து-போலி என்றால் உரிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க உள்ளோம். ” இதில் 95 சதவீதம் போலி என்பதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார் மாரிதாஸ்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*