Connect with us

#24 Exclusive

மேடையில் தமிழச்சி தங்கபாண்டியன் அவமானப்பட்ட மனுஷ்யபுத்திரன் வெளுத்து எடுத்த கவிதா பாரதி !!

சென்னை :- திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரன் மீது பரபரப்பு புகாரினை அடுக்கடுக்காக பலரும் சொல்லி வருகின்றனர், அதில் குறிப்பாக தனது 11 கவிதை நூல்களை திமுக மக்களவை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன், ஊடகவியலாளர் செந்தில் உள்ளிட்ட பலரை அழைத்து ஏற்பாடு செய்திருந்த சூழலில், அவரிடம் எழுத்தாளனாக நூல்களை எழுதிய ஏழை எழுத்தாளனுக்கு பணம் எதும் கொடுக்காமல் தீபாவளி பண்டிகையின் போது பிள்ளைகளுக்கு புத்தாடை கூட வாங்க வழியில்லாமல் செய்திருக்கிறார் என்று சொல்லி வேதனை பட்டிடுகிறார் எழுத்தாளர் இதுகுறித்து புலியூர் முருகேசன் தெரிவித்த கருத்துக்கள் பிவருமாறு :-

என்னுடைய நாவலை வேறு பதிப்பகத்திற்குக் கொடுத்தேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். யாரெனப் பெயர் குறிப்பிடாமல் இன்று நீங்கள் இட்ட பதிவு என்னைக் குறிப்பிட்டதுதான் என்பதை நானறிவேன். நீங்கள் உங்கள் பக்க நியாயங்களைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. என் மீதான அவதூறுகளைச் சொல்லி, என்னை மனங்குலைய வைக்க வேண்டும் என்றே நினைத்திருக்கிறீர்கள். அதில் வெற்றியும் பெற்று விட்டீர்கள். நல்லது. நானும் சில விளக்கங்களைப் பொதுவெளிக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்போதுதான் என் கொந்தளிப்பு மனம் இளைப்பாறும்!

1) ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் நடத்துவதற்குத் தேவையான பிரதிகளை, முன்னமே பணம் செலுத்தித்தான் பெற்றிருக்கிறேன். (ஒருமுறை கூட புத்தகங்கள் சரியான நேரத்திற்கு வந்ததில்லை) இதற்காக எத்தனை தோழர்கள் எனக்கு உதவினர் என்பது உங்களைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.
2) நான் வாங்கிய பிரதிகளுக்கும், செலுத்திய தொகைக்கும் என்னிடம் கணக்கு உண்டு. என்னுடைய ‘உடல் ஆயுதம், மக்காச்சோளக் கணவாய், மூக்குத்தி காசி’ ஆகிய நூல்களுக்கு லைப்ரரி ஆர்டர் பெற்றதன் மூலம் ‘உயிர்மையிலிருந்து’ எனக்கு ஏதும் தொகை அனுப்பியுள்ளீர்களா என்பதை உங்கள் அக்கவுண்ட் செக்‌ஷனில் தயவு செய்து சரி பாருங்கள். ( லைப்ரரி ஆர்டர் கிடைத்த தகவலையாவது சொன்னார்களா? எனக் கேளுங்கள்)

Loading...

3) என் பிள்ளைகளின் கல்வி உதவிக்காக நான் எத்தனை முறை உங்களிடம் இறைஞ்சியிருக்கிறேன் என்பதையும், நீங்கள் என்னவாகப் பதில் சொல்லித் தட்டிக் கழித்தீர்கள் என்பதையும் நினைவில் வைத்திருந்தால், மனித உறவுகளை யார் சரியாகப் பேணுகிறார்கள் என புரிந்து கொண்டிருப்பீர்கள். (கடந்த வருட தீபாவளி நேரத்தில், என் பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்க வழியின்றி, நான் எவ்வளவு கெஞ்சியிருப்பேன் என்பதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பலன் என்னவோ பூஜ்யம்தான்)
4) ஊர் ஊராக நண்பர்கள் மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வேன் எனக் கிண்டல் தொனிக்க எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான். அப்படித்தான் உங்களுக்கும் தஞ்சையிலும், புதுக்கோட்டையிலும் கூட்டம் நடத்தினோம். எனக்கென்று சில தோழமைகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் கூட்டம் நடக்கிறது. நீங்கள் சொல்வீர்களே! ‘எழுதுறவங்க கொஞ்சமாவது அவங்க புத்தகத்தை புரமோட் பண்ணனும்’ என. ஆனால், நான் அப்படிச் செய்தால் அதை எள்ளல் தொனிக்க எழுதுகிறீர்கள்! (உயிர்மைக்கு வருவதற்கு முன்பே என்னுடைய நூல் மற்றும் பிற எழுத்தாளர்களின் நூல்களையும் கனத்த பைகளில் சுமந்து ஊர் ஊராகத் திரிந்து தரையில் கடைவிரித்து விற்றவன் தான் நான்!)

Loading...

5) நீங்கள் வருங்காலங்களில் என் பெயரைக் குறிப்பிட்டே அவதூறு செய்தாலும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. மகிழ்வேன்அப்படியாவது என் பெயரைக் குறிப்பிடுகிறீர்களே என!
6) ஆனாலும் நீங்கள்தான் என்னை முதன்முதலில் நாவல் எழுதச் சொல்லி பதிப்பித்தீர்கள் என்பதை எப்போதும் மறவேன். நன்றியுணர்ச்சியுடன் இருப்பேன்.

இவ்வாறு மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் இந்த தகவலை பகிர்ந்த கவிதா பாரதி என்ற நடிகர் பல வார்த்தைகளை உள்குறியீடாக போட்டு மனுஷ்ய புத்திரனை வெளுத்து வாங்கி இருக்கிறார், அத்துடன் பலருக்கும் மனுஷ்ய புத்திரன் ராயல்டி தொகையினை கொடுப்பதில்லை என்றும் அவரே அனைத்தையும் வைத்துக்கொண்டு ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் பலரும் மனுஷ்யபுத்திரன் மீது அடுக்கடுக்கான புகாரை சொல்ல அவற்றை பற்றி கண்டுகொள்ளாத அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரன் ) தற்போது JNU பல்கலைக்கழத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காவி தீவிரவாதிகள் என்று கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளாராம், நாட்டு நடப்பை பேசக்கூடிய மனுஷ்ய புத்திரன் போன்றோர் முதலில் ஒழுங்காக எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகையை கொடுக்க வேண்டும் எனவும் பின்பு நாட்டிற்கு அறிவுரை வழங்கலாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கூட்டமில்லாத அரங்கு !!

தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற 12 பிரபலங்கள் வந்த மேடையில் ஏனோ பார்வையாளர்கள்தான் வரவில்லை, இனியாவது விவாதங்களில் மண்டையை ஆட்டி பேசுவது போல் எழுத்தாளர்களுக்கு உரிய பணத்தினை கொடுப்பாரா மனுஷ்யபுத்திரன்.

Loading...

Trending