பிரதமர் மோடி: மன் கி பாத் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாடல்!!

பிரதமர் மோடி: மன் கி பாத் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாடல்!!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைள் எடுத்து வருகின்றன. தற்போது இந்தியாவில் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை 5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு, இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது. இருப்பினும் இந்தியாவில் கொரோன

தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாநில அரசு மருத்துவ குழு நிபுணர்களின் ஆலோசனை படியும், மத்திய அரசு உத்தரவுப்படியும், முடிவுகள் எடுக்கப்படும். இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ மூலம் உரையாற்றவுள்ளார். இந்த மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியானது ,

Loading...

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதும், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் விதமாக மன் கி பாத் என்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இந்த மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் அகில இந்திய வானொலி மூலம் மாத இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மன் கி பாத் என்ற ஒளிபரப்பைக் கேட்க அகில

இந்திய வானொலி,தூர்தர்ஷன் மற்றும் நரேந்திர மோடி மொபைல் ஆப் ஆகியவற்றுடன் கேட்கலாம். இவை ஹிந்தி மொழிகளில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை மன் கி பாத் நிகழிச்சியில் மூலம் கடந்த மே 31 அன்று சமூக விலகல் மற்றும் முகமூடிகள் அணிந்து, கைகளை கழுவுதல் போன்ற

நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*