துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித்தலைவர்! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணித்தலைவர்! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

Loading...

பிரதமர் மோடி அறிவித்த விளக்கு ஏற்றும் நிகழ்வில் துப்பாக்கியால் சுட்டு அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய பாஜக மகளிர் அணித் தலைவர் மஞ்சு திவாரி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக மக்களை ஒற்றுமையாக்கும் முயற்சியாக மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன் தினம் பெரும்பாலான நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் மாடிகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஆனால் இந்தியா முழுவதும் பல இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடை பிடிக்காமல் கூட்டமாக சேர்ந்து நின்றது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதே போல பொது இடங்களிலும் தங்கள் வீடுகளிலும் பட்டாசு வெடித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுபோன்ற தேவையற்ற சம்பவங்கள் நடந்தாலும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது.

இவையெல்லாவற்றையும் விட உச்சகட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவரான மஞ்சி திவாரி கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டு அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். அவரது செயலுக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரது பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் போலிஸாரும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள அவர் வீட்டுக்கு வெளியே அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்ததால் உற்சாகமாகி தீபாவளி என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டேன் எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*