அப்போது எல்லாமே சச்சின்தான் – முன்னாள் வீரர் பாராட்டு!

அப்போது எல்லாமே சச்சின்தான் – முன்னாள் வீரர் பாராட்டு!

Loading...

1990 களில் சச்சின் டெண்டுல்கர்தான் அணியைத் தூணாக தாங்கினார் என்று அவரது சக வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் ஆரம்ப காலங்களில் அணியை ஒற்றை ஆளாக தாங்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் அறிமுகத்தின் போதே கபில்தேவ் ஓய்வு பெற்றுவிட அசாருதீன் மற்றும் சச்சின் என இரு நிலையான பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்த காலம் அது.

Loading...

90 களில் கிரிக்கெட் பார்த்தவர்கள் சச்சின் அவுட் ஆகி விட்டால் டீவியை ஆஃப் செய்துவிட்டு சென்றுவிடுவோம் என இப்போதும் சொல்லி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்து வந்தார் சச்சின். அவரின் ஆரம்ப காலம் பற்றி இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினுடன் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நடத்திய உரையாடலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் ‘சச்சின் 1989 ல் அறிமுகமானார். ஆனால் அதற்கு ஒரு வருடத்துக்குள்ளாகவே அவர் ஒரு சர்வதேச வீரர் என்பதை உலகுக்கு நிரூபித்து விட்டார். அவரின் ஆட்டம் ‘எங்களை எல்லாம் இவன் வேறு மாதிரி விளையாடுகிறான் என யோசிக்க வைத்தது. மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டில் கடினமான பவுன்சர்களில் விக்கெட்டுகளைக் காக்க போராடியபோது, டெண்டுல்கர் சதங்களை அடித்தார். சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கள் முத்திரையைப் பதித்தாலும் 1990-1997 ஆம் ஆண்டுகளில் அனைத்துமே டெண்டுல்கர் தான் எனக் கூற முடியும். அதன் பிறகே பேட்டிங் பொறுப்புகள் மூவருக்கும் பிரிந்தன’ எனக் கூறியுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*