மெகா பட்ஜெட் பொன்னியின் செல்வனின் நிலை என்ன? மணிரத்னம் தீவிர ஆலோசனை!

மெகா பட்ஜெட் பொன்னியின் செல்வனின் நிலை என்ன? மணிரத்னம் தீவிர ஆலோசனை!

Loading...

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை எப்படி நடத்துவது என இயக்குனர் மணிரத்னம் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் தொடங்கி நடத்தி முடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,  ஜெயம் ரவி மற்றும் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா, சரத்குமார் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த மெகா பட்ஜெட் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக வாங்கிய நடிகர்களின் கால்ஷீட் அனைத்தும் வீணாகியுள்ளது. மேலும் மீண்டும் அனைவரையும் ஒருங்கிணைப்பது சுலபமான காரியம் இல்லை. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்துவது குறித்து மணிரத்னம் இப்போது திட்டமிட்டு வருகிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிருந்த அவர், இப்போது அதற்கான அனுமதி கிடைக்காது என்பதால், பாண்டிச்சேரியில் நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*