Connect with us

அரசியல்

மணிரத்தினம் ரேவதி உள்ளிட்ட 50 நபர்கள் மீது தேசத்துரோக வழக்கு அதிரடி உத்தரவு ! கிழித்தெடுத்த நீதிபதி !

Published

on

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சிறுபான்மையினர் இந்தியாவில் வாழ அச்சப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

மணிரத்னம், ரேவதி, அபர்ணா சென், அடூர் கோபாலகிருஷ்ணன், , அனுராக் காஷ்யப், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்தனர்.

அந்தக் கடிதத்தில்,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை அந்தக் கடித்தில் குறிப்பிட்டிருந்தனர்.

Loading...

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 3) பீகாரின் முசாபர்பூரில் ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் வேண்டுமென்றே நாட்டின் அடையாளத்தை சீர்குலைக்கும் நோக்கிலும், தேர்தல் நேரத்தில் மோடிக்கு எதிரான பிம்பத்தை உருவாக்கவும், மத ரீதியாக மக்களை பிளவு படுத்த இவர்கள் இதுபோன்று கடிதத்தை எழுதியிருப்பதாக குற்றம் சாட்டினார்.

அந்த மனுவின் மீது நீதிபதி சூர்யகாந்த் திவாரி அதிரடியாக உத்தரவிட்டார், நாட்டில் இரண்டு தரப்பிலும் தவறுகள் நடைபெறுகிறது, பாதிக்கப்படுகிறார்கள் ஏன் திரை பிரபலங்கள் கண்ணிற்கு அதெல்லாம் தெரியவில்லை, இதில் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்க்காமல் ஏன் மதத்தை கொண்டுவருகிறீர்கள் இது முழுக்க அரசியல் நாடகம் போன்று தோன்றுவதாகவும் உடனடியாக தேச துரோக வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு ஏஜென்சிகள் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது, வட மாநிலங்களை போன்று தமிழகத்திலும் சட்ட ரீதியாக பாஜக தலைமை முயன்றால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பலாம் என்றும் அவர்கள் முயற்சி செய்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

மோடியின் ஆட்டம் தொடங்கிவிட்டதோ?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com