Connect with us

இந்தியா

தந்தையின் இறப்புச் சான்றிதழை வாங்கிய மகனுக்கு அதிர்ச்சி – அப்படி என்ன எழுதி இருந்தது ?

தந்தையின் இறப்புச் சான்றிதழை வாங்கிய மகனுக்கு அதிர்ச்சி – அப்படி என்ன எழுதி இருந்தது ?

உத்தர பிரதேசத்தில் இறந்து போன தனது தந்தைக்காக இறப்புச் சான்றிதழ் வேண்டி கிராமத் தலைவரிடம் சென்றவருக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சிர்வாரியாக கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சங்கர் என்ற முதியவர் கடந்த மாதம் இறந்துள்ளார். இதையடுத்து அரசு பதிவேடுகளில் அவர் பெயரை நீக்குவதற்காகவும் சொத்துகளைத் தன் பெயரில் மாற்றுவதற்காகவும் இறப்பு சான்றிதழ் பெற கிராமத் தலைவரிடம் சென்றுள்ளார் அவரது மகன்.

Loading...

இந்நிலையில் அந்த தலைவர் அளித்த சான்றிதழ் கடிதத்தில் எழுதி இருந்த ஒரு வாக்கியம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. அந்த கடிதத்தில் இறந்து போனவரின் பெயர் வயது உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு இறந்ததை தெரியப்படுத்தி கடைசியில் ‘ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்’ என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

Loading...

இதைப் பார்த்து அதிர்ச்சியான அவரது குடும்பத்தார் இதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த கடிதம் இப்போது வைரலாக பரவி வருகிறது.

Loading...

Trending