Connect with us

Crime

குடும்பத்தைக் கொலை செய்த ’ஹோமிசைடு’ நபர் – போலிஸுக்கு தகவல் சொல்லிவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு !

குடும்பத்தைக் கொலை செய்த ’ஹோமிசைடு’ நபர் – போலிஸுக்கு தகவல் சொல்லிவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு !

உத்தர பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரனாசியைச் சேர்ந்த வியாபாரியான சேதன் துளசியன் என்பவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு ஒரு போன் கால் செய்த அவர் ‘நான் என்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

இதைக்கேட்டு அதிர்ச்சியான போலீஸார், உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவரது தந்தை போலீஸாரைப் பார்த்து பதற்றமடைய அவர்கள் நடந்ததை அவரிடம் விளக்கியுள்ளனர். பின்னர் மேல் தளத்துக்கு செல்ல வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

Loading...

அங்கே சேதன் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் சடலமாகக் கிடந்துள்ளனர். சேதனைத் தேட அவர் வீட்டினுள் இருந்த அறையில் தூக்கில் தொங்கிய படி காணப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த போலிஸார் நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து சேதனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending