இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நபர்!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நபர்!

Loading...

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற சொல்லி நமஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒருங்கிணைந்த பகுதிகளை குறிப்பிடுவதற்காக இந்தியா என்ற பெயரை உருவாக்கினர். மேலுன் சிந்து ஆற்றின் மூலம் இந்தியா என்ற பெயர் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்றே குறிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த நமஹா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா ஆங்கிலேய காலணிய ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக உள்ளது. எப்படி நம் நகரங்கள் ஆங்கிலேயப் பெயர்களில் இருந்து இந்திய பெயருக்கு மாற்றப்பட்டதோ அது போல நமது நாட்டின் பெயரும் பாரதம் என மாற்றப்பட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஜூன் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*