குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்துகுடித்த இளைஞரின் பரிதாப நிலை ! அதிர்ச்சி சம்பவம்!

குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்துகுடித்த இளைஞரின் பரிதாப நிலை ! அதிர்ச்சி சம்பவம்!

Loading...

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுபானம் கிடைக்காததால் செங்கல்பட்டில் வார்னிஷைக் குடித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே புக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் டாஸ்மாக்குகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டும் உள்ளன.

Loading...

இது ஒருபுறமிருக்க மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழகத்திலும் கேரளத்திலும் இதுபோல 10 க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன

இந்நிலையில் செங்கல்பட்டைச் மது குடிக்க முடியாத விரக்தியில் குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் சிவராமன் உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதே போல புதுக்கோட்டையில் இரு தினங்களுக்கு முன்னதாக இதுபோல குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த 2 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*