ரஜினியை யார் என்று கேட்ட ஸ்டெர்லைட் போராளி ஒரு பைக் திருடன் ! கையும் களவுமாக சிக்கியது எப்படி தெரியுமா ?

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்ட்ரெலைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்தது இந்த போராட்டத்தை மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு நடத்திய நிலையில் இறுதிக்கட்ட போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அப்போது அதில் காயமடைந்தவர்களை பார்க்க ரஜினிகாந்த் சென்றார்

Loading...

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் காயமடைந்து மருத்துவமனையில் இருந்த போராளி சந்தோஷ் என்பவர் ரஜினிகாந்தை பார்த்து நீங்கள் யார் ? என்று கேட்டார் அதை தொடர்ந்து அவர் ஆங்கில ஊடகம் வரை பேசப்பட்டார் . இதனால் ஆரம்பத்தில் அவருக்கு சில அரசியல் கட்சிகள் உதவியதாகவும் ஆனால் அதன் பிறகு அவரை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை

அதனால் இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற லெட்டர் பேட் கட்சியை உருவாக்கி அதற்கு அவரே தலைவர் செயலாளர் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தார் . அதில் யாரும் இணையததால் வேறு தொழிலை தேடிய போராளி சந்தோஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து பைக்குகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளார் போராளி சந்தோஷ் .

Loading...

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த ஷியாம் என்பவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற நிலையில் அவர் திரும்பிவந்து பார்க்கும்போது அவரது பைக்கை காணவில்லை உடனே பதறிப்போய் காவல் நிலையத்தில் புகாரளித்த அவர் எதேர்சையாக OLX செயலியில் பார்த்தபோது தன் பைக்கை திருடியவன் அதை OLX செயலியில் விற்பனைக்கு போட்டிருந்தது தெரியவந்தது

உடனே அந்த என்னை தொடர்கொண்டு பைக்கை வாங்கிக்கொள்வதாக பேரம் பேசியுள்ளார் ஷியாம் . வண்டியை வாங்கிக்கொள்வதாக சியாம் சொல்ல திருடர்களும் ஒரு இடத்திற்கு வரசொல்லினர் பணம் எடுத்துவருவதாக சொன்ன ஷியாம் மாறுவேடத்தில் போலீசாரை அழைத்துவந்தார் அதை அறியாத திருடர்கள் இருட்டில் வைத்து வேறு வண்டியை மாற்றி விற்பனை செய்ய முயன்றபோது கையும் களவுமாக சிக்கினார் .

அவர்களை பிடித்து விசாரித்ததில் அது ஸ்டெர்லைட் போராளி சந்தோஷ் மற்றும் அவனது இரு கூட்டாளிகள் என்பது தெரியவந்தது . இதற்க்கு முன்னரும் இதேபோல பல பைக்குகளை திருடி போலி ஆவணம் தயார் செய்து OLX மூலம் போராளி சந்தோஷ் விற்றுவந்தது தெரியவந்துள்ளது . இதை தொடர்ந்து சந்தோஷ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*