இந்து மாணவர்களுக்கு தரை ! முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக பிரித்த மம்தாவின் உத்தரவு !

இந்து மாணவர்களுக்கு தரை ! முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக பிரித்த மம்தாவின் உத்தரவு !

Loading...

மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்பிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை விவகாரங்கள் துறை அலுவலர், சுற்றறிக்கை ஒன்றை, மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். கடந்த 25 – ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில், “70 சதவீதத்துக்கும் அதிகமாக முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதற்கு தனி கூடம் அமைக்கப்பட உள்ளது. எனவே, அந்தப் பள்ளிகளின் பட்டியலை ஜூன் 28 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சுற்றறிக்கையின் நகலை, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: –

Loading...

முஸ்லிம் மாணவர்களுக்கென தனி உணவுக்கூடம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்கள் மத்தியில் மத அடிப்படையில் ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? அவர்களுக்கு மட்டும் இருக்கையுடன் கூடிய இடவசதி ஏன்?

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, அவர்களை தாஜா செய்வதற்காகவே திரிணமூல் காங்கிரஸ் அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது மம்தா அரசின் மற்றொரு சதி.

இவ்வாறு மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறினார்.

மாணவர்களை மதத்தின் அடிப்படையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பிரிப்பதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் ஒரே உத்தரவு மூலம் மம்தா இந்து மாணவர்களை தரையில் அமர்த்தியும் முஸ்லீம் மாணவர்களை இருக்கையுடன் கூடிய சமையல் கூடத்தில் அமர்த்தியும் மாணவர்களுக்கு இடையே மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*