டீ குடித்தால் கருப்பாக மாறிவிடுவாய்! மாளவிகா மோகனன் சந்தித்த நிறவெறி சம்பவம்!

டீ குடித்தால் கருப்பாக மாறிவிடுவாய்! மாளவிகா மோகனன் சந்தித்த நிறவெறி சம்பவம்!

Loading...

மாளவிகா மோகனன் தான் சந்தித்த நிறவெறி பாகுபாடு சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் நிறவெறி காரணமாக ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் நிறப் பாகுபாட்டுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தாங்கள் சந்தித்த நிறவெறி பாகுபாட்டு சம்பவங்களை பற்றி பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன், தன்னுடைய 14 வயதில் தான் சந்தித்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Loading...

தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ‘எனக்கு 14 வயது இருக்கும்போது, எனது நெருக்கமான நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார். அவருடைய அம்மா ‘நீ டீ குடித்தால் மாளவிகா போல கருப்பாக மாறிவிடுவாய்’ எனக் கூறினாராம். அவன் வெள்ளை நிறத்தோல் உள்ள பையன். நான் கோதுமை நிறத் தோல் கொண்டவள். நமது சமூகவத்தில் நிறத்தின் காரணமாக வேறுபாடு காட்டும் மனநிலை உள்ளது. தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வருபவர்கள் மீது வேறுபாடு காட்டப்படுகிறது.

நாம் உலகம் முழுவதும் நடக்கும் நிறவெறியைப் பற்றி பேசுகிறோம். ஆனால் நம் பக்கத்திலேயே அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அழகு என்பது அன்பான நபராக இருப்பதுதான். அது தோலின் நிறத்தைப் பொறுத்தது இல்லை’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*