இந்தியாவில் கொரோனா நிலவரம்: 1000 ஐ தாண்டிய மாநிலம்! தமிழகத்தின் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 1000 ஐ தாண்டிய மாநிலம்! தமிழகத்தின் நிலை என்ன?

Loading...

இந்தியாவில் முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 81, 000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4789 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழகத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக இருக்க, மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. அங்கு 1164 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 64 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவும் மாநிலங்களாக மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் இருந்து வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கைக் கொண்டிருந்த கேரளா இப்போது பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த அடுத்த இடத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*