மஹாராஷ்டிரா அரசியலில் மிக பெரிய மாற்றம் ஆளுநரிடம் சென்ற பாஜக !

மஹாராஷ்டிரா அரசியலில் மிக பெரிய மாற்றம் ஆளுநரிடம் சென்ற பாஜக !

Loading...

மஹாராஷ்டிரா அரசியலில் இரண்டு முக்கிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளன அது இரண்டுமே ஆம்மாநில அரசியல் களத்தை புரட்டி போட்டு உள்ளன என்றே சொல்லலாம் அதற்கு முக்கிய காரணம் மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து கோரிக்கை மற்றும் புகாரினை அளித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோசுவாமி மீது மஹாராஷ்டிரா மாநில அரசு நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அர்னாப் கோசுவாமி மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்ட போதும், அம்மாநில காவல்துறை அரணாப்பை அழைத்து நேற்று 11 மணி நேரம் விசாரணை நடத்தியது.

Loading...

சோனியா காந்தியின் உண்மையான பெயரான ஆன்டினோ மைனோ எனும் பெயரை அர்னாப் குறிப்பிட்ட காரணத்திற்காக அர்னாப் மீது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கூட்டணி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது, இதனையடுத்து பட்னாவிஸ் தலைமையிலான பாஜகவினர் ஆளுநரை சந்தித்து ஊடகத்தை நசுக்கும் செயலில் மஹாராஷ்டிரா அரசு ஈடுபட்டு வருவதாகவும் விசாரணை நடத்தவேண்டும் எனவும் அர்னாபிற்கு ஆதரவாக புகார் அளித்துள்ளனர்.

மேலும் மற்றொரு மிக பெரிய சம்பவம் மஹாராஷ்டிரா அரசியலில் ஓடிக்கொண்டு உள்ளது, உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்று வருகிற மே மாதம் 28 ம் தேதியுடன் 6 மாதம் முடிவடைய இருக்கிறது, அதற்குள் அவர் எம் எல் ஏ வாக தேர்வாகாத பட்சத்தில் முதலமைச்சராக பதவி வகிக்க முடியாது, எனவே தன்னை சட்டமன்ற மேல் சபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தார் உத்தவ் தாக்கரே.

ஆனால் ஆளுநர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை, எனவே ஒரு மாதத்திற்குள் மஹாராஷ்டிரா அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழும் எனவும் அதிருப்தியில் உள்ள சிவசேனா எம் எல் ஏ கள் பாஜகவில் இணைந்து பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்படுகிறது, ஆனால் சிவசேனா கூட்டணியோ தற்போதைய துணை முதல்வர் அஜித் பவாரை முதல்வராகவும், உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரேவை துணை முதல்வராக தேர்வு செய்ய முயற்சித்து வருகிறதாம்.

இவ்விரண்டு சம்பவங்களால் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

©Tnnews24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*