Connect with us

#24 Exclusive

அட மஹாராஷ்ட்ராவில் ஸ்டாலினுக்கு இந்த அவமானம் தேவையா ! விடாது கருப்பு !

சமூகவலைத்தளம் :- மஹாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல் நிலவரம் அம்மாநிலத்தை தாண்டி இந்தியா முழுவதும் தற்போதுவரை பரபரப்பை ஏற்படுத்திவருகிறது, அதற்கு காரணம் 35 ஆண்டுகளுக்கு மேல் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு இருந்த சிவசேனா பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அத்துடன் தனது நேரடி எதிரிகளாக இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து நாளை (28.11/19)சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தற்போது பிரமாண்ட பதவியேற்பு விழாவிற்கு சிவசேனா தயாராகி வருகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முக ஸ்டாலினை குறிவைத்து தமிழகத்தில் எழுப்பப்படும் கேள்வி மஹாராஷ்டிரா மாநிலம் வரை சென்றுள்ளது அதிலும் குறிப்பாக..,

Loading...

ஸ்டாலின் மஹாராஷ்டிரா வரும் பட்சத்தில் விமான நிலையம் முதல் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் வழியில் கண்ணில் படும்படி மூலபத்திரம் எங்கே என தமிழிலும், மராட்டிய மொழியிலும் அச்சடித்து ஓட்டப்போவதாக மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனால் மூலபத்திரம் விவகாரம் தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளது.

Loading...

மோடி தமிழகம்வரும்போது அவருக்கு எதிராக ட்ரெண்ட் செய்த திமுகவினர் நாளை மூலபத்திரம் எங்கே என மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ட்ரெண்ட் ஆனால் என்ன செய்வது என்று கவலையில் இருக்கிறார்களாம், நாளை ஸ்டாலின் மஹாராஷ்டிரா சென்றால் நிச்சயம் ஒரு ட்ரெண்ட் இருக்கு போலயே ! மூலபத்திரம் நாளை மராட்டிய மொழியிலும் அதிரப்போகிறதோ?

©TNNEWS24

Loading...

Trending