மதமாற்ற வந்த பாதிரியாருக்கு சாணி அடி ! கூட வந்த அருள்சகோதிரிகள் ஓட்டம்? (Video )

Loading...

மதுரை.,

மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். “இது, மதமாற்றம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி” என்று அங்குள்ள இந்துக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

Loading...

இந்த நிலையில் இந்த கிராமத்தில் உள்ள சிலரை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் முயற்சியி்ல் ஒரு கிறிஸ்தவ கும்பல் ஈடுபட்டது. அந்த கும்பல், அந்த கிராமத்தில் உள்ள சில குழந்தைகளை புகைப்படம் எடுத்து, அந்த குழந்தைகளை அனாதைகள் என்று குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டு வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி அருகில் உள்ள கிறிஸ்துவ மதக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்தனர். கூடுதல் எஸ்.பி. வனிதா உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் நேற்று ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் நேற்று இரவு மீண்டும் பாதிரியார் மற்றும் இரண்டு கன்னியாஸ்திரிகள் மீண்டும் இந்துக்கள் பகுதிக்குள் சென்று குழந்தைகளை மதமாற்ற தில் ஈடுபட ஆசைவார்த்தை கூறியதாக சொல்லப் படுகிறது.

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பெண்கள் இனியும் சரிவராது என்று பாதிரியார் மற்றும் கூட வந்த கன்னியாஸ்திரிகள் மீது சாணியை ஊற்றி விரட்டியுள்ளனர். இதில் பாதிரியார் மேல் முழுவதும் சாணியில் மூழ்க, அருகில் வந்த கன்னியாஸ்திரிகள் ஓட்டம் எடுத்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை யாரையும் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவது தவறு அப்படி இருக்கையில் நேற்று மிக பெரிய போராட்டம் நடத்தியும் ஏன் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனியும் எங்கள் பகுதிக்குள் யாராவது மதமாற்றத்தில் ஈடுபட வந்தால் இதே தண்டனை பெண்கள் கையால் கிடைக்கும் என்றும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகள் புகைப்படத்தை எந்த எந்த செயல்களுக்கு பாதிரியார்கள் பயன்படுத்தினார்கள், இல்லை குழந்தைகள் மூலம் பணம் மட்டும்தான் பெற்றார்களா? இல்லை ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்களா என்பதனை காவல்துறை விசாரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*