Connect with us

#24 Exclusive

மூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டோம் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !

Published

on

மூன்றாம் உலகப்போருக்கு தயாரான விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !

சமூகவலைத்தளம்.,

நடிகர் விஜய் – நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் பிகில் இதனை டைரக்டர் அட்லீ இயக்குகிறார். விஜய் மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாரான திரைப்படங்களின் டீஸர் மற்றும் ட்ரைலர் ஆகியவை வெளிவரும் போது எப்போதும் சமூக வலைத்தளம் முன்னணி நடிகர்களின் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதுபோல் இந்த முறை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளமான யூடுப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறு பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது, ஏதோ பள்ளிக்கூடத்தில் பயிலும் புள்ளைகள் போல் சில நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில் விஜய்யின் பிகில் திரைப்படத்தை எதிர்த்தால் மூன்றாம் உலகப்போர் உருவாகும் என்று சீரியசாக எழுதி மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தற்போது இந்த போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்களை சிலர் கலாய்த்து வருகின்றனர். போர் என்றால் என்னவென்று தெரியுமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

உலக தலைவர்களான மோடி, டிரம்ப், புடின் ஜின்பிங் போன்றவர்கள் புகைப்படத்தை இணைந்து மோடியின் ட்விட்டர் அக்கவுண்டை டேக் செய்து உலக போருக்கு தயாரா என்று நெட்டிசன் ஒருவர் கொளுத்தி போட தற்போது போஸ்டர் பரவலாக கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share