Connect with us

தமிழ்நாடு

மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு – தமிழகத்தில் முதல் கொரோனா பலி !

மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு – தமிழகத்தில் முதல் கொரோனா பலி !

கொரோனாவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நோயாளி உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 2,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்றிரவு தொலைக்காட்சியில் மக்களிடம் பேசிய மோடி தயவு செய்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கொரோனாவால் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸூக்கு யாரும் பலியாகாத நிலையில் நேற்றிரவு மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் மற்றும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending