மதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு ! இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா?

இந்த, மத உரிமைக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து, தரும புர ஆதீன தலைவர், நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடி வந்தார். அப்படி ஒரு வழக்கில், 1965 பிப்ரவரி, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், திருவாரூர், மன்னார்குடி, திருச்செந்துார், பழநி உள்ளிட்ட, 45 முக்கிய கோவில்கள் மீதான, அரசின் கட்டுப்பாடு ரத்தானது.இந்திய அரசியல் சட்டம், 1950ல், அமலுக்கு வந்தது. அதில், அனைத்து சமூகங்களுக்கும் பாகுபாடின்றி மத உரிமைகள் வழங்கப்பட்டன.

Loading...

மத உரிமை என்றால், அதில் வழிபாட்டு தலங்கள், அவற்றின் நிர்வாகம் எல்லாமும் தான் அடக்கம். அரசியல் சட்டப்படி, அப்போது, பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் இயங்கிய, மெட்ராஸ் மாகாண அரசு, கோவில்களை, இந்து சமூகங்களிடம் மீண்டும் ஒப்படைத்து இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், அவசர அவசரமாக, 1951ல், தற்போதைய அறநிலையத் துறையை உருவாக்கும் வகையில் சட்டம் இயற்றியது.அந்த சட்டம் அமலாகும் வரை, தனித்தனி அரசாணைகள் மூலம் தான், கோவில்கள் அரசு வசப்பட்டு வந்தன.

ஆனால், புதிய சட்டமோ, ‘அனைத்து கோவில்களும், அரசால் எடுக்கப்பட்டவையாக கருதப்பட வேண்டும்’ என, பிரகடனப் படுத்தியது.இந்த, மத உரிமைக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து, அன்றைய தரும புர ஆதீன தலைவர், நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடி வந்தார். அப்படி ஒரு வழக்கில், 1965 பிப்ரவரி, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், திருவாரூர், மன்னார்குடி, திருச்செந்துார், பழநி உள்ளிட்ட, 45 முக்கிய கோவில்கள் மீதான, அரசின் கட்டுப்பாடு ரத்தானது.இந்த உண்மை -தமிழக மக்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும், தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக, இன்றளவும் இருந்து வருவது ஒரு பேராச்சரியம்.

Loading...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னும், கோவில்களை யாரிடமிருந்து அரசு எடுத்துக் கொண்டதோ, அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வில்லை. அதை செய்யாமல் இருக்க, 1965 ஜூலையில், அறநிலையத்துறை சட்டத்தில், 75- ஏ, 75- பி, 75 சி என்ற, மோசடி பிரிவுகள் நுழைக்கப்பட்டன.இவை தவறான பிரிவுகள், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நுழைக்கப்பட்டவை என, சென்னை உயர்நீதிமன்றம், வேறு ஒரு வழக்கில் குறிப்பிட்டு உள்ளது.

புதிய பிரிவுகள், 45 கோவில்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை, 1966 ஜூலை, 15ம் தேதி வரை நீட்டித்தன. அதன்படி பார்த்தாலும், 1966 ஜூலை, 16ம் தேதி, அந்த கோவில்களில் இருந்து, அரசு வெளியேறி இருக்க வேண்டும்; அதையும் செய்ய வில்லை.

அதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவை, அவமதித்துள்ளது மட்டுமின்றி, தன் சட்டத்தையே மதிக்காமல், 45 கோவில்களை, கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, தமிழக அரசு. வீரவசந்தராயர் மண்டபத்தின் விலைமதிப்பில்லா தொன்மையையும், எழிலையும் இழந்து நிற்கிறோம் என்றால், அதற்கு;எந்த காலத்திலும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத, இடைக்கால பதவி உடைய தக்கார், சர்வ நிரந்தரமாக தொடர்வதுஆகமப்படியும், சட்டப்படியும், கோவில்கள் உள்ளே இருக்க முடியாக்கடைகள் உள்ளிட்ட அவலங்களை சாத்தியப்படுத்தும், தமிழக அரசின் சட்டத்தையும், நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் செயல்பாடுகள் தான் காரணம்.

மதுரையில், மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய அர்ச்சனை தட்டுக்கும், பூவுக்கும் செலவு செய்யும் பக்தர்கள், அந்த பணத்தை, தமிழக அரசு மீது வழக்கு தொடுத்து, கோவிலுக்கு விடுதலை வாங்கித்தர ஒன்று கூடி செலவு செய்தால், அதுவே வழிபாட்டில் சிறந்த வழிபாடாக இருக்கும். என்று ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் கூறியுள்ளார்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*