#Breaking திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பிரபல பத்திரிக்கை யாளர் மதன் கொலை மிரட்டல்!

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் பத்திரிகையாளராக வாழ்வது கடினம் என்றும், அதிலும் குறிப்பாக பெரியாரிய, திராவிட கொள்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டால் நேரடியாக வீட்டிற்கே வந்து கொலை மிரட்டல் விடப்படும் என்ற நீண்டகாலமாக பேசப்படும் வழக்கம் தற்போது நேரடியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Loading...

மதன் ரவிச்சந்திரன் எனும் நபர் 35 வயதினை கடக்காத இளைஞர் தமிழ் ஊடகங்களை பொறுத்தவரை, பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து மிகப்பெரிய அளவில் கேள்வி கேட்கும் எந்த ஊடகங்களும் இதுவரை திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டதில்லை அதற்கு முக்கிய காரணம் அந்த ஊடகங்களின் முதலாளிகளே திமுக கூட்டணியில் இணைந்துவிட்டார்கள்.

இந்நிலையில் சில ஊடகங்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் தொலைக்காட்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று தடையும் போட்டுவிட்டார்கள், இந்த சூழலில்தான் மதன் திராவிட கொள்கை பேசும் சுப வீரபாண்டியனிடம் அத்திவரதர் குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கேள்வி எழுப்பினார், ஆனால் அவர் கேள்விக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ அதன் பிறகு அந்த ஊடகமும் மூடப்பட்டது, மதனும் வேலைஇழந்தார்.

Loading...

இந்நிலையில்தான் மதன் மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் இணைந்து மீண்டும் அதிரடியாக தனது கேள்வியை முன்வைத்து வருகிறார், அவரது விவாதம் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானாரா? இல்லை வேறு வழக்கில் கைத்தனாரா? என்ற விவாதம் எழுந்து வருகிறது.

எனவே திமுகவை எதிர்த்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மதன் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விட பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மதனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மதன் தெரிவித்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் மதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவேண்டும் என்றும், மதனுக்கு உரிய பாதுகாப்பினை மாநில அரசு வழங்கவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஊடக சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது இதனை மீறி மதனுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதை தனிப்பட்ட முறையில் TNNEWS24 குழு சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம், மக்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து மதனின் பாதுகாப்பினை உறுதி செய்ய கேட்டு கொள்கிறோம்.

:-வாசுகி கிருஷ்ணா -:

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*