பெண்ணை செட் பண்ணுவான் பணம் கொடுப்பான் விளாசிய மதன் யாரை சொல்கிறார் என்ன சொல்கிறார்?

தமிழகத்தை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள் என்பவர்கள் எப்போதும் பெரியார் சிந்தனை பேசுபவர்களாகவும், நாத்திகர்களாகவும் தொடர்ந்து இந்து மதம் மற்றும் கடவுள்களை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விமர்ச்சித்துவிட்டு, பொதுவெளியில் இதுவரை நடுநிலை செய்திகளை செல்பவர்களாக வேசம் போட்டவர்கள்தான் அதிகம்.

Loading...

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தமிழக முன்னணி ஊடகங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் இந்து மத எதிர்ப்பு கொள்கையை கொண்டவர்களாகத்தான் இருப்பர். ஆனால் தற்போது அது மெல்ல மாற தொடங்கியுள்ளது, மூத்த பத்திரிகையாளர் பாண்டே உள்ளிட்டவர்கள் உண்மைக்கு நடுநிலை கிடையாது என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு களத்தில் இறங்கி தனக்கென்று தனி பாதையை உருவாக்கி அதில் சென்றுகொண்டு உள்ளனர்.

தற்போது அதே பாணியை பின்பற்றி விரைவில் தனது பெயரை நிலை நிறுத்தியவர், மதன் எனும் மதன் ரவிச்சந்திரன் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கேட்காத கேள்விகளை நேரடியாக கேட்டு பெரியாரிஸ்ட்களை கதிகலங்கி ஓட செய்தார், மறுபக்கம் திருமுருகன் காந்தி போன்றவர்களை அழைத்தும் விவாதத்தில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் மதன் மீது தனிப்பட்ட முறையில் ஒரு முக்கிய கட்சி காழ்புணர்ச்சியில் இருப்பதாகவும் அவரை குறிவைத்து பெயரை கெடுக்க காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதன் :-

நண்பன்: மச்சி உஷாரா இரு உன் மேல அவனுங்க செம காண்டா இருக்கானுங்க..இப்போ உன் character assasinate பண்ண யார் கிட்டனா நீ பணம் வாங்குன மாதிரி இல்லனா எதனா பொண்ணுங்கல set பண்ணி honeytrap பண்ணுவானுங்க உஷார்..முன்னாடி எதிர்த்திட்டு இப்ப கூட இருக்கிறவங்க எல்லாருமே இப்படி சிக்குனுவங்க தான்.

நான் : விட்றா மச்சான் என்ன நடந்தாலும் நான் பினாயில் குடிக்க மாட்டேன்…

நண்பன்: ங்கோ*** டேய் கேக்கபக்க கேக்கபிக்க

ஆம் அவர்களுக்கென்று ஒரு வரலாறு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை நடுநிலை பத்திரிகையாளர் இல்லை என்று விமர்சனம் செய்தவர்களுக்கும் மதன் பதிலடி கொடுத்துள்ளார். அதில் :-

பத்திரிகையாளர்கள் #GoBackModi சொன்னாலும் தவறாத நடுநிலை, நாம் தமிழர் கட்சியை நாய் டம்ளர் என்று கலாய்க்கும் போது தவறாத நடுநிலை, சசிகலாவை கலாய்த்துவிட்டு அவர்கள் சேனல்லேயே தலைமையாக போகும் போதும் தவறாத நடுநிலை, வாழ்நாள் முழுக்க கருணாநிதியை எதிர்த்து எழுதுவேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் சேனல்லேயே தலைமையேற்கும் போது தவறாத நடுநிலை, நான் எதிர்கட்சிகளை விமர்சித்தால் மட்டும் ஏன் தவறுகிறது… இனிமே இப்படிதான்… நடுநிலை போர்வைகள் தினம் கிழிக்கப்படும்.

இவ்வாறு மதன் அதிரடியாக தெரிவித்துள்ளார். எனினும் மதனுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*