அதிகாரப்பூர்வமாக வெளியேறிய மதன் யார் காரணம்? இனி பாண்டே வழியில் மதன் !!

பிரபல நெறியாளர் மதன், வின் செய்திகள் ஊடகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளார், தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக அளவு உச்சத்தை அடைந்த பத்திரிக்கையாளர்களில் மதனும் ஒருவர் எந்த அளவு தனது நேர்காணல்கள் மூலம் உச்சத்தை அடைந்தாரோ அதே அளவு எதிர்பினையும் சந்தித்துள்ளார்.

Loading...

காவேரி ஊடகத்தில் பணியாற்றிய மதன் பெரியாரிஸ்ட் சுப.வீரபாண்டியனை தனது கேள்விகள் மூலம் துளைத்து எடுத்தார், பதில் சொல்லமுடியாமல் நழுவிய சுபவீ பல கேள்விகளுக்கு அவரால் முகம் கொடுத்து கேட்க கூட முடியாத அளவிற்கு நொந்து வெளியேறினார் அதன் பிறகு காவேரி ஊடகத்திற்கு பெரியாரிஸ்ட்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்ப ஊழியர்கள் போராட்டம் என பிரச்சனை நீண்டது.

அதன் பிறகு மதன் வின் தொலைக்காட்சியில் இணைந்தார், சாட்டலைட் சேனலான வின் டிவி மதன் வருகைக்கு பிறகே அதிகம் பேரால் பார்க்க கூடிய சேனலாக மாறிவந்தது, மற்ற தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் மதனின் விவாதங்கள் தனி பாதையில் சென்றன, கிஷோர் கே ஸ்வாமி பங்கு பெரும் விவாதங்கள் அனைத்து விவாதங்களையும் விட அதிக அளவு பார்வையாளர்களை சமூக வலைத்தளங்களில் பெற்று கொடுத்தது.

Loading...

ஒரு வழியாக சேனல் முன்னேற தொடங்க அங்குதான் புதிதாக வேலைக்கு சேர்ந்த உயர் பொறுப்பில் உள்ளவர் மூலம் மதனுக்கு நெருக்கடிகள் எழுந்து வந்துள்ளன, மேலும் மதனுக்கு ஒத்துழைப்பு என்பது குறைந்து வந்துள்ளது, மேலும் அவர் இன்றி விவாதங்களை நடத்தும் நிலைக்கு அவர் தொலைக்காட்சி நிறுவனத்தை கொண்டு சென்றுள்ளார்.

இதனால் பல நேரங்களில் சிறு சிறு உரசல்கள் இருந்து வந்த நிலையில் மதன் தற்போது வின் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார், இதற்கு முன்னர் நான் வின் செய்திகளில் தான் இன்னமும் பணிபுரிவதாக உறுதி படுத்தியிருந்த மதன் தற்போது வெளியேறி இருக்கிறார்.

அவர் தொடர்ந்து கட்டம்கட்ட படுவதற்கு காரணம் திமுக மற்றும் பெரியாரிஸ்ட் ஆகியோர் குறித்து அதிரடியான வாதங்களை முன் வைத்ததே என்று கூறப்படுகிறது , இந்நிலையில் இங்கும் சில அரசியலில் கட்சிகள் தூண்டுதலில் ஈடுபட்டு வரலாம் என குற்றசாட்டுகள் எழுந்துள்ளன, தற்போது மதன் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே வழியில் தனியாக சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை சந்திக்க புதிதாக சேனல் ஒன்றில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் முழுமையாக மதன் தனது தரப்பு விளக்கத்தை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது, தமிழகத்தில் ஒரு கட்சியை எதிர்த்து கேள்வி எழுப்பினால் பணிபுரியும் சூழல் உண்டாகாது என ஒரு தரப்பினர் தொடர்ந்து உணர்த்திவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*