சபாஷ் சரியான பதிலடி உங்கள் சாதி பாசம் தெரியாதா போ போ !! விரட்டி அடித்த மதன் !!

திரௌபதி திரைப்படம் திரைக்கு வந்து வரலாறு காணாத அளவில் கட்சிகள் சாதிகள் கடந்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இடையே வரவேற்பை பெற்று வருவதாக விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஆனால் ஊடகத்துறையில் இருப்பவர்களோ முற்போக்குவாதிகளோ திரௌபதி திரைப்படத்தின் பெயரை கேட்டாலே படபடத்து வருகின்றனர்.

Loading...

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் நெல்சன் திரௌபதி குறித்து பதிவு செய்திருந்தார் “திரௌபதி மாதிரியான திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு உண்மையில் தமிழ்ச் சமூகத்தில் ஒளிந்து கிடக்கிற பிற்போக்குத்தனத்தின் கூட்டு மனசாட்சி. கசடை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு குறிப்பிட்டுருந்தார். மேலும் சில ஆண்டுகளில் வீட்டில் ரிலாக்சாக ஆற அமர்ந்து பாப்கான் ஐஸ்க்ரீமோடு யூடியூப் / நெட்பிளிக்ஸ்ஸில் படம் பார்க்க விரும்பினால் அந்தப் பட்டியலில்
திரௌபதி வராது என்றா நினைக்கிறீர்கள் ? எனவும் கேள்வி கேட்டிருந்தார்.

அதாவது நாடாக காதலால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கும், வீதிக்கும் வந்திருக்கிறது, என ஆதாரங்களுடன் சொன்ன பிறகும் அந்த திரைப்படத்தை பார்க்க செல்பவர்கள் கஷடாம், இதற்கு மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் மதன் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
‘திரௌபதி’ RS பாரதி சான்றளித்த நடுநிலைகுமார்ஸ் சொல்வதைப் போல் படத்தில் எங்கேயும் பிராமணர்களைத் தூக்கிப்பிடிக்கவில்லை. அதேபோல் தமிழ் அல்லாத தாய்மொழி பேசும் so called திராவிட முகமூடி போட்டுகொண்டு தமிழர்களை காலம்காலமாக ஏமாற்றும் கும்பலையும் தூக்கி பிடிக்கவில்லை. அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள இருகாட்சிகள் சான்று..

Loading...

காட்சி1: லஞ்சம் வாங்கிக் கொண்டு போலிச் சான்றிதழ் வழங்கும் அரசு அதிகாரி கேரக்டரில் ஒரு வடகலை ஐயங்காரைப் போட்டுள்ளார்கள்…!
காட்சி 2: சென்னை சப்- ரெஜிஸ்ட்ரார் ஆஃபிஸில் எங்களை மீறி யாரும் ‘டீ’ விற்கக்கூடாது தம்புடு என்று கதாநாயகனை ஒரு தெலுங்கர் கண்டிக்கும் போது, யார் இடத்துக்கு வந்து யார் சொந்தம் கொண்டாடுறது என்று அவரை போலிஸ்காரர் விரட்டுகிறார்..!

So called நடுநிலைகுமார்ஸ் strict மூஞ்சி குமார்ஸ் நீங்கள் வேலை செய்யும் ஊடகங்களில் appraisal timeகளில் MDயிடம் நானும் உங்க சாதிதான்னு சொல்லியும் கேட்ட சம்பள ஏற்றம் தராமல் இன்னொரு சேனல்க்கு சென்ற உங்கள் வரலாறுகளை நான் அறிவேன்.. அதைவிட உங்கள் கீழ் வேலைக்கு சேரவேண்டும் என்றால் மனம் கவர்ந்த அரசியல்வாதி யாரென்று கேட்பீர்கள். திருமா என்றால் 24hrsஇல் நீங்கள் appointment order அனுப்பிய வரலாறுகளையும் நான் அறிவேன்.. so யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது ஊடகத்துறையில் வேலை செய்பவர்களின் சாதிய பாசம், வேஷம் தெரியாதா போ எனவும், ஊடகத்துறையில் இருப்பவர்கள் திரௌபதி பார்த்துதான் கருத்து சொல்லவேண்டும் என்ற அர்த்தம் தேவையில்லை எனவும் நெல்சன் போன்றவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*