வெளிப்படையாக வெடித்த கிஷோர் மதன் திரை மறைவு மோதல் !! காரணம் என்ன?

தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் திமுகவை எதிர்த்து களமிறங்கிய மதன் மற்றும் கிஷோர் இருவருக்கு இடையே கடந்த மூன்று நாட்களாக பணி போர் சமூகவலைத்தளம் மூலம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.

Loading...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிஷோர் மதன் பணிபுரியும் சேனல் விஷன் யூடுப் சேனல் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார், அதன் பிறகு நடைபெற்ற விசாரணைக்கு பிறகு கிஷோர் காவல்துறையினரால் வழக்கு ஏதும் பதியாமல் விடுவிக்க பட்டார்.

இந்த சூழலில்தான் மதன் கிஷோர் இடையேயான நட்பில் விரிசல் வந்ததாக கூறுகிறார்கள், தான் சேனல் விஷன் அலுவலகத்திற்கு செல்வது மதனுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அங்கு போலீசார் வந்தது எப்படி எனவும் சந்தேகம் எழுந்துள்ளது, சிலர் எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கூறியதன் பேரில்தான் அங்கு வந்ததாக காவல்துறை தரப்பில் சிலர் கூறியிருக்கின்றனர்.

Loading...

இதனை அடுத்து மதன் கிஷோர் இடையே வாக்குவாதம் நண்பர்கள் இடையேயான மோதல் உச்சம் அடைந்துள்ளது, மேலும் வெளிப்படையாக இருவரும் சமூக வலைத்தளங்களில் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமா குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர், மதன் தரப்பிலோ தான் புகழ் பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் முன்னாள் நண்பர்களால் பழி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் இனி அமைதியாக வாழவேண்டும் என்றால் இந்த வேலையை விட்டுவிட்டு சென்றால்தான் முடியும் எனவும் குறிப்பிட்டு வேதனை அடைந்துள்ளார், மதனின் தற்போதைய வேலையை அமைத்து கொடுத்ததில் கிஷோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக விமர்சனம் செய்து கொள்வது இருவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை பொதுவெளியில் பேசாமல் இருவரும் பேசிக்கொள்வது நலம் பயக்கும் எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3945 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*