மதன் கேட்ட கேள்வி? சங்கடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்!!

திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினை நோக்கி பத்திரிகையாளர் மதன் 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்,அவை பின்வருமாறு :- ஸ்டாலின் மற்றும் தி மு க வினருக்கு என் கேள்விகள்:
தேசிய மக்கள் பதிவேடு (NPR ) மற்றும் NRC இது இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டதே என்று போராடிக்கொண்டிருக்கும் தாங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்த 2003 ம் ஆண்டில் தான் வாஜ்பாய் அரசாங்கம் ஒரு குடியுரிமை சட்ட திருத்த 1/6

Loading...

மசோதாவை பாராளமன்றத்தில் தாக்கல் செய்து 2004 ம் ஆண்டில் நிறைவேற்றி சட்டமாக்கியது . அதில் SECTION 14 (A ) நுழைக்கப்பட்டது . அது தான் இன்றைய CAA – NPR -NRC தொடர்பிற்கான அடித்தளம் . இதை மறுக்க முடியுமா ? 2/62010 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் 5 ம் ஷரத்தில் தெளிவாக , அதாவது தேசிய மக்கள் பதிவேடு என்பது NRC க்கான முதல் படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது , அப்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது தி மு க .

3/6இந்தச் சட்டதிருத்தத்தை பாரதிய ஜனதா முதலில் கையாண்ட பொழுதும் கூட்டணியில் தி மு க தான் , காங்கிரஸ் கையாண்ட பொழுதும் கூட்டணியில் தி மு க தான் … ஆனால் இப்பொழுது கும்பலில் கோவிந்தா கதையாக எதிர்ப்பு நாடகம் , பேரணி என்றெல்லாம் மலிவான மட்டரக அரசியல். 4/6அப்புறம் சிலர் கேட்கலாம் ஏன் நீங்கள் CAA க்கு கருத்து சொல்லவில்லை பயமா என்று? 2009 போராட்ட களத்தில் வைகோ போன்றோரை மாணவர்களின் தலைவராய் பார்த்து அரசியல் கற்றவன் நான்.. ஆதலால் என் பார்வையில் போராடுவது போராட்டத்தை எதிர்ப்பது அவர் அவர் ஜனநாயகம் என் பார்வை ஒன்று தான்.. 5/6

Loading...

போராட போராட்டத்தை தலைமைகொள்ள ஒரு உண்மை தன்மை வேண்டும் என்பதே…அது திமுகவிடம் CAA – NRC விஷயத்தில் எள் அளவுமில்லை.. திரிந்திட்டோம்னு சொன்னா ஒரு கேள்வி சோனியா காந்தி உயிர்க்கு LTTEயால் ஆபத்து என்று சொன்னது ஏன்? இஸ்லாமியர்கள் எதிர்க்கும் NIA க்கு கையெழுத்து போட்டது ஏன்? 6/6 இவ்வாறு அவர் தனது கேள்வியை எழுப்பியுள்ளார், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் இதற்கு பதில் சொல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*