’இந்தியன் 2’ பட விபத்தால் 8 லட்சம் அதிகம் செலவு செய்த மாநாடு தயாரிப்பாளர்

’இந்தியன் 2’ பட விபத்தால் 8 லட்சம் அதிகம் செலவு செய்த மாநாடு தயாரிப்பாளர்

சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது கிரேன் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வந்த போதிலும் இந்த விபத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இனிமேலும் விபத்து ஏற்படாத வகையில் படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒருவேளை நம்மையும் மீறி விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும் வகையில் அனைத்து பட தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

இதனை அடுத்து முதல் உதாரணமாக ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் 7.75 லட்சத்திற்கு ரூபாய் 30 கோடிக்கு தனது படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்துள்ளார் அவரது இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சுரேஷ் காமாட்சி போல் அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *