Connect with us

#24 Exclusive

முதல்நாளே வெளியான ‘மாநாடு’ படத்தின் வீடியோ!

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் பூஜையின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சீமான் அவர்கள் கேமராவை ஆன் செய்து தொடங்கி வைத்தார் என்பதும், முதல் ஷாட்டுக்கு இயக்குனர் சேரன் கிளாப் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காபி ஷாப்பில் சிம்பு கல்யாணி பிரியதர்ஷன் கருணாகரன் உள்பட ஒருசில காபி குடிப்பது போல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது மாநாடு படத்தின் முதல் நாள் முதல் காட்சி முதல் டேக் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிம்பு இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடர்ச்சியாக ஒரு மாதம் நடைபெற இருப்பதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending