20 வருடத்திற்கு முன்பே கிடைத்தது 3000 ரூபாயும் கிறிஸ்துவ புத்தகங்களும்தான் ! வெளுத்தது திருமாவளவனின் மத சாயம் !!!

திருமாவளவன் தன்னை மதச்சார்பற்றவர்களாக காட்டிக்கொண்டு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை மதமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதற்காகவே அவர் சனாதான எதிர்ப்பு என்ற பெயரில் இந்து மதத்தை எதிர்த்து வருவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துவரும் நிலையில்.,

Loading...

தற்போது அதற்கு நேரடி சாட்சியம் கிடைத்துள்ளது பாஜகவை சேர்ந்த பட்டியல் சமூக மாநில தலைவர் மா வெங்கடேசன் தனது சிறுவயதில் நடந்த அனுபவத்தையும் அங்கு திருமாவளவன் என்ன பேசினார் என்பது குறித்து வெளியிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை உண்டுபண்ணியுள்ளது இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-

லயோலா கல்லூரியின் ஐக்கப் (AICUF – All India Catholic University Federation) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் மாணவர்களிடையே கிறிஸ்தவத்தை பரப்புவது அதாவது மதமாற்றம் என்பது இதனுடைய முக்கிய நோக்கம். அதுமுடியவில்லை என்றால் மாணவர்களை கம்யூனிச சித்தாந்தத்திற்கு மாற்றுவது.

Loading...

மாணவர்களின் சிந்தனை எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஐக்கப் மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கலந்துகொள்ளும் விஐபிக்கள் யார் என்று பார்த்தேலே தெரிந்துவிடும்.
கம்யூனிசவாதியும் நடிகையுமான ரோகிணி, ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அங்கு மாணவர்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவார்கள்.

காதலர் தின சிறப்புக் கூட்டம் கூட இந்த ஐக்கப் இல்லத்தில் நடைபெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வருடம் எனக்கு நினைவில்லை. 2000 அல்லது 2002வது வருடமாக இருக்கலாம். நான் மயிலாப்பூர் விவேகானந்தர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஐக்கப் மன்றத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பற்றிய மாநில அளவிலான வினாடிவினா போட்டி நடைபெற்றது.

அதில் நானும் எனது நண்பரின் தம்பி மோகனும் கலந்து கொண்டோம். பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். கடைசியில் நாங்கள் முதல் பரிசு வெற்றிபெற்றோம். பரிசளிப்பு நிகழ்ச்சியில் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டார். அண்ணல் அம்பேத்கரைப் பற்றி பேசி கடைசியில் கிறிஸ்தவம் நமக்கு விடுதலையளிக்கும் என்றும் பேசினார்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு 3000 ரூபாயும், கிறிஸ்தவ புத்தகங்களும்தான். அதில்கூட அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இல்லை.தெளிவாக, மாணவர்கள் கிறிஸ்தவத்தை உள்வாங்க வேண்டும் என்பதற்காகவே அண்ணல் அம்பேத்கர் பெயரை அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இப்போதும் அப்படித்தான். இதற்கு அப்போதும் சரி, இப்போதும் சரி சில பட்டியல் சமூக அமைப்புகளும், கட்சிகளும் துணை நிற்கின்றன. என்று குறிப்பிட்டுள்ளார், அதாவது அம்பேத்கர் குறித்து நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பைபிள் பரிசாக அளித்துள்ளனர், இதில் திரவமாவளவன் கிறிஸ்தவம் நமக்கு விடுதலை அளிக்கும் என 2000 ஆண்டிலேயே பேசியிருப்பது..,

பல ஆண்டுகளுக்கு முன்பே மதமாற்றம் திட்டத்தோடு திருமாவளவன் இறங்கியிருப்பதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர், இதற்கு திருமாவளவனை ஆதரிப்பவர்கள் என்ன கருத்து சொல்ல போகிறார்கள் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*