தோனியின் சொத்து மதிப்பு 800 கோடி… ஆனால் கொரோனாவுக்காக கொடுத்து 1 லட்சம் – வச்சு செய்யும் ரசிகர்கள் !

தோனியின் சொத்து மதிப்பு 800 கோடி… ஆனால் கொரோனாவுக்காக கொடுத்து 1 லட்சம் – வச்சு செய்யும் ரசிகர்கள் !

Loading...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

Loading...

கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்குக் கொடுத்து வருகின்றனர்.

பிசிசிஐ தலைவர் கங்குலி 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி கொரோனா நிவாரண நிதியாக ஒரு தன்னார்வல நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் ‘இவரின் சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய். ஆனால் அவர் கொரொனா நிவாரணத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.’ எனக் கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*