Connect with us

சினிமா

இந்தியன்2 விபத்து – பலியானவர்களுக்கு லைகா 50 லட்சம் இழப்பீடு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தாருக்கு தயாரிப்பு நிறுவனமான லைக்கா லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அப்போது ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி ஒளிப்பதிவாளர் சந்திரன் மற்றும் படப்பிடிப்புக்கு உணவு பரிமாறும் மது ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேரின் இழப்பு தமிழ்ச் சினிமாவுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் எழுப்ப, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக நடிகர் கமலஹாசன் அறிவித்திருந்தார்.

Loading...

அதையடுத்து இப்போது தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்சன்ஸ் 3 பேரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிதி உதவிகள் ஒருபுறமிருந்தாலும் படப்பிடிப்பின்போது தொடர்ந்து இதுபோல நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பதை கண்டித்து உழைப்பாளிகளுக்கு உரிய காப்பீட்டுத் திட்டம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending