கொரோனா தொற்று… உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன?

கொரோனா தொற்று… உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன?

Loading...

கொரோனா தொற்று இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் இந்தியா உலகளவில் அதிகம் பாதித்த 10 நாடுகளுக்குள் இடம்பெற்று விட்டது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு அதன் பின்னர் 3 முறை நீட்டிக்கப்பட்டு இன்றோடு 62 நாட்கள் முடிந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது.

Loading...

இந்நிலையில் இந்தியா தற்போது உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தற்போது எட்டியுள்ளது. ஸ்பெயின் , இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவால் குறித்துப் பேசியுள்ள மத்திய சுகாதார துறை இணையமைச்சர் லாவ் அகர்வால் ‘இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும், தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதம் 41 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை முதல் ஊரடங்கின் போது 7.1 சதவீதமாக இருந்தது. அதே போல இறப்பு விகிதமும் 3.3 ல் இருந்து தற்போது 2.83 ஆக குறைந்துள்ளது. உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவிகிதமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

மீட்பு விகிதம் அதிகமாக இருப்பதும் இறப்பு விகிதம் குறைவதும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு ஆறுதலான விஷயமாக உள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*