குடும்பத்தைப் பிரிந்து 10 ஆண்டுகளாக குடிக்கு அடிமையான ஓட்டுனர் – மது கிடைக்காததால் சாலையோர மரத்தில்…!

குடும்பத்தைப் பிரிந்து 10 ஆண்டுகளாக குடிக்கு அடிமையான ஓட்டுனர் – மது கிடைக்காததால் சாலையோர மரத்தில்…!

Loading...

புதுக்கோட்டை அருகே கடந்த 10 நாட்களாக மது கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஓட்டுனர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே புக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் டாஸ்மாக்குகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டும் உள்ளன.

Loading...

இது ஒருபுறமிருக்க மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழகத்திலும் கேரளத்திலும் இதுபோல 10 க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசித்து வந்த குடும்பத்தாரைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கருப்பையா தினமும் குடித்து குடிக்கு அடிமையாகியுள்ளார். இப்போது இந்தியாவில் ஊரடங்கு காரணமாக கடந்த 14 நாட்களாக மது கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சாலையோர மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே மது கிடைக்காததால் வார்னிஷைக் கலந்து குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை விட தற்கொலைகளால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகமாகியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*