திடீரென ஓட்டலுக்குள் புகுந்த லாரி: புரோட்டா மாஸ்டர் பரிதாப பலி!

Loading...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் இயங்கி கொண்டிருந்த ஓட்டல் ஒன்றில் புகுந்த விபத்தில் புரோட்டா மாஸ்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை என்ற பகுதியில் லாரி ஒன்று மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருங்காட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு சாலையோர உணவகதிற்குள் புகுந்தது. இதனால் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டலை விட்டு வெளியேரினர்

Loading...

இந்த பயங்கர விபத்தில் ஓட்டலின் முன்புறம் புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். அவரிடம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் ஓட்டல் அருகில் இருந்த மின் கம்பம் ஒன்றும் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*