தளபதியை அடுத்த சூப்பர் ஸ்டார்: லோகேஷ் கனகராஜூக்கு அடித்த அதிர்ஷ்டம்

Loading...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் என்ற திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தை அடுத்து அவருக்கு கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது

‘கைதி’திரைப்படம் உருவாகி வெளியாகும் முன்னரே அவருக்கு விஜய் நடிக்கும் ’தளபதி 64’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமின்றி தளபதி 64 படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே பல முன்னணி நடிகர்கள் அவரை தொடர்பு கொண்டு தங்களுடைய அடுத்த படத்தை இயக்க வேண்டுகோள் விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது

Loading...

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் லோகேஷ் கனகராஜ் சென்று பார்த்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் ’தலைவர் 169’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என்றும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*