தமிழகத்துக்கும் வருமா வெட்டுக்கிளி தாக்குதல்? – அச்சத்தில் விவசாயிகள்!

தமிழகத்துக்கும் வருமா வெட்டுக்கிளி தாக்குதல்? – அச்சத்தில் விவசாயிகள்!

Loading...

வட இந்தியாவில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து செல்லும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தென் இந்தியாவுக்கும் வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி வரிசையாக ஒவ்வொரு நாடுகளாக காலி செய்துவிட்டு தற்போது பாகிஸ்தான் வழியாக வட இந்தியாவில் நுழைந்துள்ளன பாலைவன வெட்டுக்கிளிகள். இவைக் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை தின்று விட்டு அந்த இடத்தில் இருந்து அடுத்த இடத்துக்கு சென்றுவிடுகின்றனர். நேற்றைய முன் தினம் மட்டும் இவை 33,000 மனிதர்கள் சாப்பிடும் உணவை தின்று சென்றுள்ளன. நடப்பில் இருக்கும் எந்த பூச்சிக் கொல்லி மருந்துகளும் இவற்றை ஒன்றும் செய்வதில்லை.

Loading...

வட இந்தியாவின் ராஜ்ஸ்தான் மாநிலத்தில் அழிச்சாட்டியம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள் அடுத்து உத்தர பிரதேச மாநிலத்துக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கும் வந்து பயிர்களை நாசம் செய்யுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் பீதியைக் கிளப்பிய்யுள்ளது.

இந்நிலையில் தமிழக வேளாண் துறை  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது தில் ‘வெட்டுக்கிளி படைகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை., எனினும் பாதுகாப்பு முன்னெச்ச்சரிக்கையாக பூச்சி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*