பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் சொல்லியது என்ன? ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று மாலை  ஆலோசனை நடத்தினார்.

Loading...

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

கடைசியாக நடந்த கூட்டத்திலும் மாநில முதல்வர்கள் 9 பேரில் 5 பேர் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மூன்றாவது கட்டமாக மே 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது இருப்பினும் கடந்த மாதம் 20-ம் தேதிக்கு பின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க விதிகளை மத்தியஅரசு தளர்த்தியது.

Loading...

நாட்டில் உள்ள 775 மாவட்டங்களில் கரோனா பாதிப்புள்ளான மாவட்டங்கள், மிதமான பாதிப்ப , பாதிப்பு இ்ல்லாதவை என சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாகப் பிரித்து அறிவித்தது.

மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முதல்வர்கள் உடனான கலந்துரையாடலில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்தும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் பொது போக்குவரத்து உள்ளிட்டவை தொடங்குவது குறித்து பேசப்பட்டது, அப்போது பல மாநில முதல்வர்கள் மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை தற்போது தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமியிடம் பிரதமர் மோடி உடனான கலந்துரையாடல் குறித்து கேள்வி எழுப்ப  அவர் தெரிவித்த கருத்து தற்போது பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது,  பிரதமர் பேச்சில் இருந்து ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதற்க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் சில தளர்வுகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் அதே நேரத்தில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை தொடங்கலாம் எனவும், மேலும் பச்சை மண்டலங்களில் முழுமையான தளர்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*