Connect with us

#24 Exclusive

கோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Published

on

சமையல்குறிப்பு :

கோதுமைமாவு கேக் முட்டை சேர்க்காமல் ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஒருபவுல் எடுத்து அதில் கால்கப் அளவிற்கு ரீபைண்ட் ஆயில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு உருண்டை வெள்ளம் அரைகப் அளவிற்க்கு சேர்த்து கொள்ளுங்கள். அதில் கால் கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். பிறகு ஒருகப் கோதுமை மாவு எடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் கலந்து இவை எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும். பாதம், முந்திரி சிறிதாக நறுக்கி அதில் லேசாக கோதுமை மாவு தூவி அந்தமாவுடம் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது எப்படி கோதுமை மாவு கேக் செய்வது என்று பார்க்கலாம். இப்போ கேக் பேன் எடுத்து அதில் முழுவதுமாக எண்ணெய் தடவி விடுங்கள். பிறகு கலந்தமாவை அதில் ஊற்றி பரவிடுங்கள். ஒரு பாத்திரம் எடுத்து அதில் நைஸ் உப்பு அல்லது மண் சட்டியில் போட்டு 5நிமிடம் சூடு செய்து பிறகு ஸ்டாண்ட் சட்டியில் வைத்து அதன்மேல் கேக்பேனை வைக்கவேண்டும். 15நிமிடம் கழித்து கேக் பேன் அது ஆறியதும் ஒரு கத்தி வைத்து சுத்தி வெட்டிவிடவும்.

பிறகு கேக்பேனின்மேல் ஒரு பிளேட்டை வைத்து கவுத்திவிடவும். கேக் அழகாக மிருதுவாக வரும். மிகவும் ஹெல்தியான கேக். ருசியாக இருக்கும். முயற்சிசெய்து பாருங்கள்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share