சீன அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி !! முதல்முறையாக PL A ராணுவம் திட்டம் !! ஆப் தடை செய்ததை கிண்டல் செய்தவர்கள் எங்கே?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீன நாட்டில் தற்போது இராணுவ புரட்சி வெடிக்க இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர் தெரிவித்து இருப்பதுடன் அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தி இருப்பது உலக அளவில் சீனா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

கடந்த மாதம் 15- ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் காலடி வைத்ததை தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது, இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், சீனா தரப்பில் 50 ற்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் மக்களுக்கு சீன அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாக்கியுள்ளது.

இந்தியா வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்து இறுதி அஞ்சலி செலுத்தி நிதி உதவி அளித்துள்ளது, ஆனால் சீனாவோ எந்த ஒரு தகவலையும் மக்களிடம் கூறாமல் அவர்களை எரித்துவிட்டு அஸ்தியை மட்டும் வீட்டிற்கு அனுப்பியது.

Loading...

இதனால் சீன அதிபரின் மீது அந்நாட்டு மக்கள் பெருத்த கோபத்தில் இருந்தனர் இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மிகுந்த முன்னாள் தலைவரின் மகன் அடுக்கடுக்கான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அதில்

ஜியான்லி யாங் தனது பேட்டியில், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது . அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சியை செய்ய வாய்ப்புள்ளது. ஜிங்பிங் அச்சத்தில் இருக்கிறார்.

சீனாவின் அரசில் ராணுவத்தின் பங்குதான் அதிகம். ராணுவத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும். ராணுவத்திற்கு எதிராக ஜிங்பிங் செயல்பட தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு நல்லது அல்ல. பிஎல்ஏ ராணுவத்தில் இருக்கும் பலர் ஏற்கனவே ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் ஜிங்பிங் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்குவார்கள்அதேபோல் சீனாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசி வருகிறார்கள். இந்தியாவுடன் சீனா மோதியதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜிங்பிங்கிற்கு எதிராக கலகம் செய்ய வாய்ப்புள்ளது. பிஎல்ஏ ராணுவத்தை பல காலமாக ஜிங்பிங் ஒடுக்கி வருகிறார். இப்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை கூட ஜிங்பிங் சொல்லவில்லை. மக்கள் எல்லோரும் கொதித்து போய் இருக்கிறார்கள். மொத்தம் சீனாவின் பிஎல்ஏ ராணுவத்தில் 5.7 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் ஆட்சியை, அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை, என்று ஜியான்லி யாங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா சீனாவின் ஆப் மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் உணவு துறை உள்ளிட்ட பலவற்றில் சீன நிறுவனங்களை அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் சீன பெரு முதலாளிகள் சீன அதிபருக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர், இது ஒன்று புரட்சியில் முடியலாம் இல்லை சீனாவின் அழிவிற்கு காரணமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் கல்யாண வீட்டில் சீப்பை ஒழித்துவைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது போன்று இருப்பதாக நக்கல் அடித்தவர்களுக்கு தற்போது சீன அதிபருக்கு எதிராக இராணுவ புரட்சி உண்டாகலாம் எனும் செய்தி செருப்படியாக அமைந்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*