இனி இதுபோல் நடந்தால் பேசிக்கொண்டு இருக்கமாட்டேன் எச்சரிக்கை விடுத்த பாஜக தலைவர் முருகன் !

பாஜக மாநில தலைவராக முருகன் நியமனம் செய்யபட்டது முதல் தற்போதுவரை அவரது ஒவ்வொரு அசைவுகளையும் நிதானமாக எடுத்து வைத்து வருகிறார், அதிகமாக ஊடகங்களை சந்திப்பை தவிர்த்துவிட்டு தேவைப்படும் போது மட்டும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

Loading...

தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்கள் என்பவை ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே அதை அவரும் அறிந்து வைத்திருக்கிறார், மேலும் தமிழகத்தில் போலி செய்தியை பரப்பி தமிழக ஆளுநர் பன்வாரிலால் மீது குற்றம் சுமத்திய பத்திரிகைகள் பின்னாளில் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையில் மன்னிப்பு கேட்டு பெட்டி செய்தி வெளியிட்ட வரலாறுகளும் உண்டு.

இந்த நிலையில் தமிழகத்தில் மற்றும் ஒரு சம்பவம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த முருகன் பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்படுவார் என எதிர்க்கட்சிகள் நினைக்கவில்லை, இதை கருத்தில் கொண்டு சாதிகளுக்குள் சிண்டு முடியும் வேலையை ஊடகங்கள் மேற்கொண்ட நிலையில் பிரபல ஊடகத்திற்கு மரண அடி கிடைத்துள்ளது.

Loading...

பொதுவாக காதல் திருமணம் செய்து கொண்டு சங்கர் கொலை செய்யப்பட்ட பின்பு பிரபலமான உடுமலைப்பேட்டை கௌசல்யா மீது பாஜகவினர் வெறுப்பில் இருந்தனர், மேலும் பாஜகவின் கொள்கைக்கு இடைநிலை சாதிகளின் ஆதரவு அதிகரித்தது, அதனை உடைக்கும் விதமாக கௌசல்யாவிற்கு உதவி செய்து வேலை வாங்கி கொடுத்ததே இப்போதைய பாஜக தலைவர் முருகன் தான் என பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டது.

அதாவது முருகனை சாதி வெறி பிடித்த மனிதனாக முன்னிறுத்தி பாஜகவில் உள்ள மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வெறுக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு ஆழம் பார்க்க செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் செய்தி வெளியிட்ட குமுதம் பத்திரிகையை அழைத்து இதுபோல் போலி செய்தியைப் போட்டால் அவதூறு வழக்கு தொடர்வேன். முதல் முறை என்பதால் எச்சரிக்கையுடன் விடுகிறேன் என்று எச்சரித்திருக்கிறார் முருகன் .

எச்சரிக்கை விடுத்த செய்தி ஊடக தரப்பிடம் தீயாக பரவ தற்போது அநாவசியமாக பழைய தலைவரை சீண்டுவது போல பத்திரிக்கையாளர்கள் இவரைச் சீண்டுவதில்லை. இன்னொரு முக்கியமான விசயம் உடுமலை கௌசல்யாவுக்கு அரசு வேலை உறுதியான நேரம் வரை முருகன் தேசிய எஸ்.சி ஆணையத்தில் பொறுப்பிலேயே இல்லை. அதை கூட உறுதி செய்யாமல் போலி செய்தி போட்டிருக்கிறார்கள்.

இனி ஊடகங்கள் போலி செய்தியோ தவறான யுக செய்தியோ பகிர்ந்தால் விடமாட்டேன் என அமைதியான முறையில் அதே நேரத்தில் கண்டிப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார், இதனையடுத்து தான் ஊடகங்கள் சீண்டாமல் அமைதியாகி இருக்கின்றனவாம். இனி வரும் காலங்களில் திருமாவளவன் உள்ளிட்ட பலருக்கும் முருகன் மூலம் பல அதிரடி அரசியல் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

இப்படியெல்லாம் தமிழக அரசியல் சூழல் மாறும் என்று கணித்துதான் முருகனை டெல்லி பாஜக தலைமை நியமனம் செய்ததோ !

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*