மோடியை திட்டினால் பொன்னாடை பதவியில் இருந்து நீக்கப்படுவாரா பாஜக மாவட்ட தலைவர் மற்றொரு அரசகுமார் அடையாளம் காணப்பட்டார்

மோடியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து காவல்நிலையம் சென்ற திமுக பிரமுகரை பிறந்தநாளுக்கு அழைத்து பொன்னாடை போற்றி கவுரவித்து பாஜக கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் அவரது அண்ணன் முருகன் மீது கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

Loading...

கதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் MS மாதேஸ்வரன் பலமுறை பாஜக மற்றும் மோடியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து தரக்குறைவாக விமரச்சனம் செய்து வந்துள்ளார் இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு ஓசூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, மேலும் சமீபத்தில் CAA எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் கைதாகி தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தபோது திமுக நிர்வாகிகள் முன்பு மீண்டும் மிக அருவருக்க வகையில் ஒருமையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்ச்சனம் செய்த வீடியோ வெளியாகி இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் உண்டானது.

நிலைமை இப்படி இருக்க பாஜகவில் துணை தலைவராக இருந்த அரசகுமார் வழியில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நாகராஜ் அண்ணன் முருகன் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமரை தரக்குறைவாக பேசிய மாதேஸ்வரனை அழைத்து அவருக்கு பொன்னாடை போற்றியுள்ளனர்.

Loading...

இந்த செய்தி பிரபல நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது, இதனை பார்த்த பாஜக தொண்டர்கள் தலைமைக்கு புகார் அளித்துள்ளனர், கொள்கை ரீதியாக எதிர் திசையில் இருப்பவர்கள் விழாவில் கலந்துகொள்வது தவறல்ல ஆனால் பிரதமர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நபரை அழைத்தது மட்டுமல்லாமல் அவருடன் தொடர்பில் இருப்பது தவறான செயல் என்றும்.,

இதுகுறித்து தமிழக பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர் அவ்வாறு தவறும் பட்சத்தில் டெல்லி தலைமைக்கு இங்கு நடக்கும் அரசியல் கூத்துக்கள் குறித்து தெளிவான தகவல் அனுப்பப்படும் என்றும் கூறுகின்றனர்.

தமிழக பாஜகவில் இவர்களை போன்ற நிர்வாகிகள் இருக்கும் வரை ஒரு நாளும் வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் அம்மாவட்ட பாஜகவினர்.

நடவடிக்கை எடுக்குமா கட்சி தலைமை நீக்க படுவாரா மற்றொரு அரசகுமார்?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*