அடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை ! அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மற்றொருவர் மனைவியுடன் அடிக்கடி தகாத உறவில் ஈடுபட்டு வந்த மாரிமுத்து என்ற கார் ஓட்டுனரை மூன்று பேர் சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Loading...

கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் மாரிமுத்து ( வயது 30) இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் தீர்த்த செல்வன் என்பவரது மனைவி ஈஸ்வரி உடன் தகாத உறவு இருந்துள்ளது, இதனையடுத்து இருவரையும் தீர்த்த செல்வன் எச்சரித்துள்ளார், அதனையடுத்து இருவரும் தொடர்பில் இல்லை என்று கூறப்படுகிறது, மேலும் மாரிமுத்துவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

அதனையடுத்து ஈஸ்வரியுடன் தொடர்பில் இல்லை என ஈஸ்வரியின் கணவன் தீர்த்த செல்வன் நம்பியிருக்கிறார், ஆனால் ஈஸ்வரி மாரிமுத்து இருவரும் கள்ள தொடர்பில் இருப்பதும் கடந்த வாரம் ஏரிக்கரையில் ஒதுங்கியதும் தெரியவந்துள்ளது, இதனால் ஆத்திரம் அடைந்த தீர்த்த செல்வன் தனது நண்பர்கள் கோவிந்தராஜூ மற்றும் கேசவன் ஆகியோர் உடன் சேர்ந்து மரிமுத்துவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

Loading...

இதனையடுத்து கோவிந்தராஜூ அதே ஏரிக்கரைக்கு மது குடிக்க மாரிமுத்துவை அழைத்துள்ளார், புதிதாக தலை பொங்கல் கொண்டாடிய மாரிமுத்துவும் தானும் ட்ரீட் தருவதாக ஏரிக்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது, அங்கு இருவரும் மது அருந்த அப்போது அருகில் இருந்த தீர்த்த செல்வன் பெரிய பாறாங்கல்லை எடுத்து மாரிமுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அடுத்த நாள் மாரிமுத்து சடலத்தை ஊர் மக்கள் ஏரிக்கரையில் கண்டறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தீர்த்த செல்வன் அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ள காதல் சம்பவத்தால் தலை பொங்கல் கொண்டாடிய நபரின் தலையிலேயே கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*